உடல் எடையை 10 கிலோ வரை குறைக்க வேண்டுமா? முருங்கைக் கீரையை இப்படி சாப்பிடுங்க…!

0

மற்ற கீரைகளை விட 25 மடங்கு இரும்புச்சத்து மிகுந்ததாகவும், ஆரஞ்சு பழத்தை விட 7 மடங்கு விட்டமின் சி நிறைந்ததாகவும், முட்டையை விட 5 மடங்கு புரோட்டின் சத்து நிறைந்ததாகவும், வாழைப்பழத்தை விட 15 மடங்கு பொட்டாசிய சத்துக்கள் நிறைந்ததாகவும், கேரட்டை விட 10 மடங்கு விட்டமின் ஏ நிறைந்ததாகவும், பாலை விட 17 மடங்கு கால்சிய சத்து நிறைந்ததாகவும், சுண்ணாம்புச் சத்துக்களும் இதர தாது உப்புக்களும் நிறைந்ததாக திகழ்கிறது முருங்கைக் கீரை. இத்தகைய சத்துக்கள் நிறைந்த முருங்கைக் கீரையை ஜூஸ் செய்து சாப்பிட்டால் 10 கிலோ வரை குறைக்கலாம்.

எல்லா விதமான ஊட்டச்சத்துக்களும் நிறைந்த முருங்கைக் கீரையை சாறாக எடுத்து வந்தால், உடலின் இந்து இடுக்கிலிருக்கும் கொழுப்புகளை அது சுத்தமாக வெளியேற்றிவிடுகிறது. மேலும் இடுப்பை பெரிதாக்கும் டாக்ஸின் பொருட்களையும் அது கரைத்து அழித்து விடுகிறது. இதனால் ஒரே வாரத்தில் உங்கள் உடலிலிருந்து கொழுப்புகள் வெளியேறி, வயிறு தட்டையாக மாறிவிடும்.

ஒரு கப் தண்ணீரில் முருங்கைக் கீரையை போட்டு அதை மிக்ஸியில் நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதை வடிகட்டி, அதில் சிறிதளவு எலுமிச்சை மற்றும் தேவைக்கேற்ப தேனை கலந்து அப்படியே பருக வேண்டும்.

அன்றாட உடற்பயிற்சியுடன் இந்த ஜூஸை 7 நாட்களுக்கு காலை வெறும் வயிற்றுடன் குடிந்து வந்தால் உடல் எடையை 5 கிலோ வரை குறைக்கலாம்.

ஒரு வாரத்திற்கு பிறகு ஒரு வாரம் இடைவெளி விட்டு அடுத்த வாரத்திலும் இதே முறையை பின்பற்றலாம். ஒவ்வொரு வாரத்திற்கும் இடையே இடைவெளி இருப்பது சிறந்தது.

முருங்கைக் கீரையை பொரியல் செய்து அடுப்பிலிருந்து இறக்கும்போது கோழி முட்டையை உடைத்து ஊற்றி கிளறி, மதிய உணவில் தொடர்ந்து ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும். – Source: webdunia


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply