எலுமிச்சை வேக வைத்த நீரை குடித்தால் கிடைக்கும் நன்மைகள்.

0

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலை வெறும் வயிற்றில் பருகி வர உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் எடையை குறைக்க உதவுகிறது எலுமிச்சை.

எனவே ஆரோக்கியமான முறையில் உடல் எடை குறைய , தினமும் காலையில் எலுமிச்சை சாற்றுடன் மஞ்சள் தூள் கலந்து பருகி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

குறிப்பாக எலுமிச்சை நீரில் வாய் கொப்பளிப்பதன் மூலம் தொண்டை வலி மற்றும் தொண்டை கோளாறுகளுக்கு தீர்வு காணலாம்.

எலுமிச்சையின் மற்றொரு சிறந்த பயன், இது இரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் உங்களது உடலை சோர்வடைவதில் இருந்து மீட்டு ஓய்வளிக்கும். எலுமிச்சை சாறு நமது மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.

நம் உடலில் செரிமானம் மண்டலம் மட்டும் சரியாக இல்லாவிட்டால் உடலில் பலவகையான பிரச்சனைகளை ஏற்படும்.

எனவே தினமும் எலுமிச்சை ஜூஸை சாப்பிடும் போது, அது உடலில் உள்ள அனைத்துக் கசடுகளையும் அடித்து இழுத்துக் கொண்டு வருவதால், செரிமானப் பிரச்சனையே இல்லாமல் போய்விடும்.

மேலும் நம் உடலில் அல்கலைன் மற்றும் அமிலப் பண்புகளுக்கு இடையில் ஒரு சமநிலையை ஏற்படுத்துவதில் எலுமிச்சை ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது.

உடலில் அமிலப் பண்புகள் அதிகரிக்கும் போது நமக்கு உடல் நலக் குறைவு ஏற்படுகிறது. எலுமிச்சையில் உள்ள அல்கலைன் பண்புகள், இந்த உடல் நலக் குறைவைத் தகர்த்து விடுகிறது.

Leave a Reply