இந்தப் பொருட்கள் எல்லாம் உங்களுக்கு கிடைத்தால், அதிர்ஷ்டம் உங்கள் வீட்டு வாசல் கதவை தட்ட போகிறது என்று அர்த்தம்.

0

அதிர்ஷ்டம் என்பது ஒருவருக்கு எப்பொழுதுமே இருக்காது அது கிடைக்கும் நேரத்தில் நாம் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒரு சிலர் ஏதாவது வாங்க வேண்டும் என்று நினைத்தால் கையில் பணம் இருக்கும், வாங்க நேரம் இருக்கும், எல்லாம் இருந்தும் வாங்க செல்லும் வேளையில் அவர்களால் அந்த பொருளை வாங்க முடியாது. இப்படி நினைத்த ஒரு பொருளை நாம் வாங்க வேண்டும் என்றால் கூட அதற்கும் ஒரு அதிர்ஷ்டம் வேண்டும்.

அதிர்ஷ்டத்திற்கான பொரு
ளே அது இஷ்டத்துக்கு வருவதால் தான் அதற்கு அதிர்ஷ்டம் என்று பெயர். அப்படியான அதிர்ஷ்டம் உங்களுக்கு இருந்தால் இந்த பொருட்கள் எல்லாம் உங்களுக்கு கட்டாயமாக கிடைக்கும்.
அது என்ன என்பதை இந்த குறிப்புகளின் மூலம் அறிந்து கொள்ளலாம் அது எப்படி என்பதை இந்த பதிவில் நீங்கள் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

அதிர்ஷ்டம் நமக்கு இருக்கிறது என்பதை ஒரு சில விஷயங்களை மூலம் நாம் உணர்ந்து கொள்ளலாம். அதாவது எங்காவது சென்று கொண்டிருப்போம் திடீரென நமக்கு கீழே ஏதாவது ஒரு பொருள் கிடைக்கும். அதாவது ஒரு ஐந்து ரூபாய் நாணயமோ, ஏதாவது ஒரு சின்ன குண்டுமணி அளவு தங்கம், ஏன் ஒரு ரூபாய் நாணயம் கூட இருக்கலாம். இதைப் போன்று ஏதாவது ஒன்று உங்களுக்கு கிடைத்தால் உங்களைத் தேடி அதிர்ஷ்டம் வருகிறது என்று அர்த்தம். உங்கள் பார்வையில் அந்த பொருள் படும் போது கட்டாயமாக நீங்கள் அதை எடுத்து கொள்ள வேண்டும். ஏனென்றால் பல பேர் செல்லும் வழியில் யார் கண்ணிலும் தென்படாத ஒரு பொருள் உங்கள் கண்ணிற்கு மட்டும் தெரிகிறது என்றால் அதிர்ஷ்டம் உங்களுக்கு இருந்தால் மட்டுமே இது போன்ற விஷயங்கள் நடக்கும்.

ஆனால் இதற்காக பெரிய தொகையோ, பெரிய பொருளோ கிடைத்தால் அதிர்ஷ்டம் நமக்கு கிடைத்தது என்று வீட்டிற்கு கொண்டு வந்து விடக் கூடாது. அதை உரியவரிடம் சேர்க்கும் முயற்சி எடுக்க வேண்டும். அதை நமக்கான அதிஷ்டம் என்று எடுத்து வந்து விட கூடாது. உங்களுக்கு கீழே கிடைக்கும் அந்த சிறு பொருளால் அதை தவற விட்டவருக்கு நஷ்டம் என்று எதுவும் இருக்க கூடாது. அது போன்ற பொருள் தான் உங்களுக்கு அதிஷ்டத்தை தேடி தரும்.

கோவில்களில் இதே போல் உங்களுக்கு கிடைத்தால் மிக மிக அதிர்ஷ்டம். கோவிலில் கிடைப்பது கடவுளே நேரடியாக உங்களுக்கு அதிர்ஷ்டத்தை வாரி வழங்குவதை போல ஆகும். அப்படி கோவிலில் உங்களுக்கு கிடைத்தால் மட்டும் உங்களுக்கு ஒரு பத்து ரூபாய் கிடைக்கிறது என்றால், உங்கள் கையில் உள்ள வேறு ஒரு பத்து ரூபாயை கோவில் உண்டியில் சேர்த்து விடுங்கள். கோவிலில் கிடைக்கும் எந்த பொருளும் கோவில் சொந்தம் என்று ஒரு ஐதீகம் உண்டு .எனவே அப்படி கிடைக்கும் போது மட்டும் இதே போல் செய்து விடுங்கள்.

இப்படி எடுத்து வந்த தொகையை நீங்கள் செலவழித்து விடவே கூடாது இது தான் மிகவும் முக்கியம். இப்படி எடுத்து வந்த பொருளை ஒரு துணியில் வைத்து தனியாக மடித்து உங்கள் பூஜை அறையில் வைத்து விடுங்கள். அதன் பிறகு அது அங்கேயே இருந்தாலும் சரி, அல்லது நீங்கள் தனியாக வேறு எங்கேனும் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டாலும் சரி, அது நல்லது தான். ஆனால் இப்படி அதிர்ஷ்டமாக கிடைக்கும் இந்த பொருளை நீங்கள் எந்த காலத்திலும் செலவு செய்து விடக்கூடாது. அதை நீங்கள் அப்படியே வைத்திருந்தால் மட்டுமே உங்களின் அதிர்ஷ்டம் உங்களுடனே இருக்கும்.

Leave a Reply