இரத்த அழுத்தம் குறைய பாட்டி வைத்தியம்.

0

நடைப்பயிற்சி:

இந்த இரத்த அழுத்தம் குறைய தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் நடப்பது ரத்த அழுத்ததைக் கட்டுப்பாடாக வைத்திருக்க உதவும்.

இரத்த அழுத்தம் குறைய – எடை குறைதல்:
அதிக உடல் எடையும் கூட ரத்த அழுத்தம் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது. எனவே உடல் எடையைக் குறைத்தால் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டிற்குள் வரும்.

எடை குறைக்கும் போது, ரத்தக் குழாய்கள் விரிவடைந்து சரியான ரத்தப்போக்கிற்கு உதவும். இதன் மூலம், இதயத்தின் இடது வென்ட்ரிக்கிள் பகுதிக்கு ரத்தம் சீராகப் பாய உதவும்.

இரத்த அழுத்தம் குறைய – புகை மற்றும் மதுப்பழக்கம்:
புகை பிடித்தல் மற்றும் மதுப்பழக்கம் இரண்டும் இரத்த அழுத்தம் வருவதற்கு மிக முக்கிய காரணமாக உள்ளது. புகைப்பிடிப்பதுதான் அனைத்து நோய்களுக்கும் மூலக்காரணியாக உள்ளது.

இரத்த அழுத்தம் குறைய – காபி குடிப்பதை தவிர்த்தல்
தினமும் அதிக டீ மற்றும் காபி போன்ற பானங்களை அருந்தாமல் இருப்பது மிகவும் நல்லது. காபியில் இருக்கக்கூடிய காஃபின் என்கிற வேதிப்பொருள் ரத்த அழுத்தத்தை தூண்ட செய்யும் காரணியாகும்.

எனவே இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்றால், டீ மற்றும் காபி குடிப்பதை தவிர்த்து கொள்ளவும்

Leave a Reply