தலையில் நீர் ஏற்றம் குறைய பாட்டி வைத்தியம்..!!

0

பொதுவாக தலையில் அதிகமாக நீர் கோர்த்து கொண்டால் இரவு உறங்குவதற்கு முன் அடுப்பில் ஒரு பெரிய பாத்திரத்தை வைத்து அவற்றில் பாதியளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வையுங்கள்.

தண்ணீர் நன்றாக கொதித்ததும் அடுப்பில் இருந்து பத்திரமாக இறக்கி அவற்றில் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் 2 கைப்பிடியளவு நொச்சி இலை சேர்க்க வேண்டும்.

பின் இந்த நீரில் இருந்து வரும் ஆவியினை முகத்தில் ஆவி பிடிக்க வேண்டும். ஆவி பிடிக்கும் போது 2-3 போர்வையினை போர்த்திக்கொண்டு முகத்தில் ஆவி பிடியுங்கள். இவ்வாறு முகத்தில் ஆவி பிடிப்பதினால் தலையில் உள்ள நீர் அனைத்தும் வெளியேறிவிடும்.

மஞ்சள் ஒரு கிருமிநாசினி பொருளாகவும் நொச்சி இலை தலைவலி, சளி, இருமல், தும்மல் போன்ற பிரச்சனைகளை சரி செய்வதற்கும் பயன்படுகிறது.

தலையில் நீர் கோர்த்தல் பாட்டி வைத்தியம் குறிப்பினை தலையில் நீர் கோர்த்து கொள்ளும் பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் தலைவலியால் தினமும் அவதிப்படுபவர்கள் வாரத்தில் இரண்டு முறை பின் பற்றி வரலாம். நல்ல பலன் கிடைக்கும்.

Leave a Reply