தூதுவளையில் பல்வேறு நன்மைகள் உள்ளன. நீல நிற பூக்களை கொண்ட தூதுவளை இலைகளின் பின்புறம் மற்றும் காம்புகளில் முட்கள் இருக்கும். தூதுவளை ஆயுளை அதிகரிக்கும் மருந்தாக விளங்குகிறது.
இது, சளியை கரைக்க கூடியதாக அமைகிறது. ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.
தூதுவளையை பயன்படுத்தி இருமல், சளியை போக்கும் ரசம் தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: தூதுவளை இலை, பூக்கள், பெருங்காயம், கருவேப்பிலை, இஞ்சி, கொத்துமல்லி, காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், பூண்டு, புளிகரைசல், கடுகு, நல்லெண்ணெய், உப்பு. பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு அதில் சிறிது பெருங்காய பொடி, கடுகு, மிளகாய் வற்றல், இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் தூதுவளை இலை, பூக்கள் சேர்த்து வதக்கவும்.
சிறிது உப்பு, மஞ்சள் பொடி, புளிகரைசல் சேர்க்கவும். தேவையான அளவு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதனுடன் மிளகு, சீரகம், பூண்டு கலவை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
அதிகமாக கொதிக்க வைக்க கூடாது. இந்த ரசத்தை குடித்துவர இருமல், சளி சரியாகிறது. உடலுக்கு பலம் கொடுக்கிறது.



