சோர்வை நீக்கும் மோர்…!!

0

கோடைகாலத்தில் வெயிலின் தாக்கத்தால் நீர் இழப்பு ஏற்பட்டு தோலில் வறட்சியை ஏற்படும்.

இதை சரிசெய்யும் முறையை காண்போம். தேவையான அளவு மோர் எடுத்துக் கொள்ளவும்.

இதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். பின்னர், மெல்லிய துணியை மோரில் நனைத்து 15 நிமிடம் ஒத்தடம் கொடுத்து வந்தால், தோலில் ஏற்படும் சிவப்பு தன்மை மாறும். எரிச்சல் குறையும்.

பல்வேறு நன்மைகளை கொண்ட மோர் உடல் உஷ்ணத்தை தடுக்கவும், களைப்பை போக்கவும் பயன்படுகிறது. சிறுநீர் எரிச்சலை தணிக்கும்.

தோலுக்கு குளிர்ச்சி தருகிறது. மோரை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

இதனால் எலும்புக்கு பலம் கிடைக்கும். மோரில் வைட்டமின் சி, இரும்பு சத்து உள்ளது.

மோர் சரிவிகித உணவாக உள்ளது. எளிதாக கிடைக்க கூடியதும், சிறந்த பானமான மோரை கோடைகாலத்தில் பயன்படுத்தி உடல் நலத்தை பாதுகாக்கலாம்.

Leave a Reply