தினமும் ஒருகைப்பிடி கொண்டக் கடலை!

0

சைவ பிரியர்களுக்கு பல ஊட்டச்சத்துகளை கொண்டைக் கடலை தருகிறது.
சாதாரணமாக பயன்படுத்தப்படும் ஒரு உணவாக கொண்டக் கடலை விளங்குகின்றது.
இதனால் அதிகபட்சமான மக்கள் கொண்டைக்கடலையை சுவைத்திருப்போம்.
சில இந்துமத பண்டிகைகளில் கூட பிரத்தியோக உணவாக கொண்டைக்கடலை விளங்குகிறது.

அத்துடன் ஊட்டச்சத்தை பொருத்தவரை கொண்டகடலை அதிகமான சத்துக்களை கொண்டுள்ளது.

கொண்டைக்கடலை
கார்பன்சோ பீன்ஸ் என அழைக்கப் படும் கொண்டைக்கடலை புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச் சத்து ஆகியவற்றை மிகுதியாகக் கொண்டுள்ளது.
ஆகவே உங்கள் உடலில் ஊட்டச் சத்தை அதிகரிக்க இது தவிர்க்க முடியாத ஒன்றாக விளங்குகிறது.

அத்துடன் இறைச்சிக்கு ஒரு அருமையான மாற்றாக கொண்டைக்கடலை உள்ளது.

ஒரு கப் கொண்டைக்கடலையானது வயது வந்தவர்களின் புரத தேவையில் மூன்றில் ஒரு பங்கை அளிக்கும் திறனை கொண்டுள்ளது.
ஆகவே கொண்டைக் கடலையின் சில ஆரோக்கிய நன்மைகளை பார்ப்போம்.

இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது.
சுண்டல் எனப்படும் கொண்டைக்கடலை இரத்த கட்டுப்பாடு நன்மைகளை கொண்டுள்ளது.

நம்மில் பலருக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருக்கின்றது.
உயர் இரத்த அழுத்தத்தை தினசரி போதுமான அளவில் பொட்டாசியம் உட்கொள்வதன் மூலம் நிர்வகிக்க முடியும்.

கொண்டைக்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

சுமார் 4,700 மி. கி சுண்டல் இருந்து நீங்கள் 474 மி. கி பொட்டாசியத்தை பெற முடியும்.
ஆகவே இரத்த அழுத்தத்தை நிர்வாகிக்க நினைப்பவர்களுக்கு உதவும் ஒரு தானியமாக கொண்டகடலை உள்ளது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

கொண்டைக்கடலையில் உள்ள மற்றுமொரு நன்மை என்னவெனில் உங்கள் இதயத்திற்கு போதுமான ஊட்டச் சத்துக்களை கொண்டுள்ளது.

இது செலினியம், மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் பி, இரும்பு ஆகிய சத்துக்களை கொண்டுள்ளதால் அது இதயத்திற்கு நன்மை பயக்கிறது.

இதனால் இதய அபாயங்களை குறைப்பதில் கொண்டைக்கடலை மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகின்றது.

நீரிழிவு நோய் என்பது இங்கு பலருக்கு மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது.
நீரிழிவு நோயை நிர்வகிக்கவும் அதன் ஏற்ற இறக்கத்தை கட்டுப்படுத்தவும் சுண்டல் உதவுகிறது.

ஒரு கப் கொண்டைக் கடலையில் 12.5கிராம் நார்ச்சத்து உள்ளது.
இது நீரிழிவு நோய்களுக்கு அதிக நன்மை பயக்கின்றன.

இதில் உள்ள குறைந்த க்ளைசெமிக் மற்றும் ஸ்டார்ச் அமிலோஸின் இரும்பு காரணமாக உடல் கொண்டைக்கடலையில் உள்ள சத்தை உறிஞ்சுகிறது.

இதனால் இரத்தத்தில் சமநிலை கடத்தப்படுகிறது.

செரிமானத்தை மேம்படுத்த கூடியது

கொண்டைக்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

கொண்டைக்கடலையில் ராபினோஸ் எனப்படும் கரையக் கூடிய உணவு நார்சத்து உள்ளது.

செரிமான செயற்பாட்டில் இது பெருங்குடலை உதவுகிறது.

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதன் மூலம் இது உடலுக்கு நன்மை புரிகிறது.

மேலும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் கொண்டைக்கடலையை உண்பதற்கு மறக்க வேண்டாம்.

Leave a Reply