ஆடிப் பூரம் விரதம் இருந்தால் கெட்டிமேளம் சத்தம் கேட்குமாம்.

0

ஆடி மாதத்தில் வரும் பூரம் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாளாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நல்ல நாளில் தான் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் குறிப்பிடுகின்றன.

ஆடிப்பூர நாளில் தான் அன்னை பூமாதேவியை ஸ்ரீவில்லிபுத்தூரில் துளசி மாடத்தில் ஆண்டாளாக அவதரித்தார்.

ஆடி பூரம் விரதம் இருந்து அம்மனை தரிசித்தால் திருமண வரம் கிடைக்கும் என்பதுடன் வளைகாப்புக்கு வளையல் வாங்கி கொடுத்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது இந்து மதத்தின் ஐதீக்கம்.

ஆடி மாதத்தில் வெள்ளி,செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் தந்து அருளுவாள்.

ஆடி மாதத்தில் பூர நட்சத்திர நாள் அம்பாளுக்குரிய விசேஷ தினமாகும்.

சித்தர்களும், முனிவர்களும் இந்த நல்ல நாளில் தான் தங்களுடைய தவத்தை தொடங்குவதாக புராணங்கள் எடுத்துரைக்கின்றன.

குறித்த புண்ணிய தினத்தில் ஆண்டாள் ஆலயத்திற்கு சென்று வழிபடுவதன் மூலம் திருமணமாகாத பெண்களுக்கு கல்யாண வரம் கிடைக்கும்.

எம்பெருமானின் பல்வேறு அம்சங்களான சங்கு,சக்கரம்,வில், கதை, வால் போன்ற ஆயுதங்கள் மாத்திரமே ஆழ்வார்களாஅவதரித்த தருணத்தில் பூமா தேவியும் ஆடிப்பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள்.

ஆடிப்பூரத்தில் அவதரித்த அம்மன்

உலக மக்களைக் காப்பதற்காக அம்பாள் சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம் மற்றும் கூறப்படுகின்றது.

ஆடிப்பூரம் நாளில் சிவாலயங்களில் அன்னைக்கு வலகாப்பு நடத்துவார்கள்.

தாய்மை பெருக்க தவமிருக்கும் பெண்கள் அனைவரும் வளைகாப்பு நடத்துவதற்காக வளையல்கள் வாங்கி கொடுத்து தங்களுக்கு விரைவில் வளைகாப்பு நடைபெற வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள்.

அம்மனுக்கு வளைகாப்பு

உலகத்தைப் படைத்து,காத்து, இராசித்து , அருளும் அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தன காப்பு, குங்குமக் காப்பு நடத்துவார்கள்.

ஆனால் அன்னைக்கு வளைகாப்பு நடக்கும் நாள் தான் ஆடிப்பூரம்.

தாய்மை என்பது பெண்களுக்கே உரித்தான ஒரு தனி சிறப்பு அம்சமாகும்.

ஆகவே உலக உயிர்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் அன்னைக்கு இந்த நாளில் வளைகாப்பு நடத்த படுகிறது.

ஆடிப்பூர நாளில் தான் பூமாதேவி ஸ்ரீ வில்லிபுரத்தில் அவதரித்தார்.

அவரது அவதார தினம் 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்படுகிறது.

பெருமாளையே கடவுளாக நினைத்து மாலையை சூடி கொடுத்த சுடர்கொடியாளை ஆடிப்பூர நாளில் தரிசனம் செய்தால் திருமண வரம் கிடைக்கும்.
ஆனந்த வாழ்வு அமையும்.

ஆகவே இந்நன்னாளில் ஆண்டாளையும் அம்மனையும் தரிசனம் செய்வோம்.

Leave a Reply