தினமும் தக்காளி ஜூஸ் அருந்துவதால் இவ்வளவு நன்மைகளா?

0

தக்காளி என்பது எமது அன்றாட உணவில் சேர்க்கப்படும் ஒரு உணவாகும்.

இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டு காணப்படுகின்றது.
அந்தவகையில் உலகம் முழுவதும் மக்கள் தங்கள் சமையலுக்கு அதிகமாக பயன்படுத்தப்படும் முக்கிய காய்கறியாக தக்காளி விளங்குகிறது.
தக்காளி இல்லாமல் அதிகமான உணவுகளை தயாரிக்க முடியாது.
அந்த அளவிற்கு தக்காளி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த காய்கறியாக உள்ளது.
மேலும் தோட்டத்தில் எளிதாக வளரக்கூடிய ஒரு சிறிய காயகவும் தக்காளி உள்ளது.

தக்காளி
சமீபத்திய ஆண்டுகளில் பதப்படுத்தப்பட்ட தயாரிப்புகள் காரணமாக தக்காளியின் உபயோகமானது மேலும் அதிகரித்துள்ளது.

முக்கியமாக தக்காளி பழச்சாறுக்கு முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.

இதை செய்வது மிகவும் எளிது. இது எளிதாக சந்தையில் கிடைக்கக்கூடியது மற்றும் நம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

தக்காளி சாறு ஒரு சத்தான பானமாகும்.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது சிறந்த பானமாக கருதப்படுகிறது.
தக்காளிகளை விட தக்காளி சாறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது என கூறப்படுகின்றது.

நீரழிவு நோயை கட்டுப்படுத்துகிறது

நீரிழிவு நோய்க்கு உடல் பருமன் முக்கியமான காரணியாக உள்ளது.
தக்காளி சாறு உடல் கொழுப்பின் அளவை குறைக்க உதவுவது மட்டுமில்லாமல் அதிக குளுகோஸ் அளவையும் குறைக்க உதவுகிறது.

இது நீரிழிவு நோய்களுக்கு உடல் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

தக்காளி சாற்றில் உள்ள லைகோபீன் மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற வலுவான கரோட்டினாய்டுகள் இருப்பது நோய் எதிர்ப்பு தன்மைக்கு ஆதரவாக அறியப்படுகின்றது.

ஆகவே இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலுக்கு நோயை உண்டாக்கக்கூடிய பாக்டீரியா மற்றும் வைரஸ்களுக்கு எதிராக போராட உதவுகிறது.

இதய நோய்க்கான அபாயத்தை குறைக்கிறது.

தக்காளி சாறு அருந்துவது அழற்சி நோய்கள் மற்றும் இதய நோய்களுக்கு எதிராக செயல்பட உதவுகிறது.

அத்தியாவசிய வைட்டமின்கள், பினோலிக் அமிலங்கள் மற்றும் லைகோபீன் ஆகியவை இதய நோய்களுக்கான ஆபத்து காரணிகளான கொழுப்பு மற்றும் குளுக்கோஸ் அளவை குறைக்கவும் உடல் செயல்பாடுகளை மேம்படுத்த உதவுகிறது.

எடை இழப்பிற்கு உதவுகிறது
தக்காளி சாறு குடிப்பது எடையை குறைப்பதற்கான எளிய வழிகளில் ஒன்றாகும்.
ஒரு ஆய்வின்படி தக்காளிச்சாறு அழற்சி பிரச்சனைகள் குறைக்க உதவுகிறது.
அத்துடன் உடல் பருமன்,அதிக கொழுப்பு, அதிக தசை மற்றும் இடுப்பு சுற்றளவு அதிகரிப்பு ஆகிய பிரச்சனைகளை சரிசெய்ய தக்காளி சாறு உதவுகிறது. அத்துடன் இது ஆரோக்கியமான முறையில் எடையை குறைக்க உதவுகிறது.

மனச்சோர்வு
தக்காளி சாற்றில் லைகோபீன் மற்றும் காபா ஆகியவை அதிக அளவில் உள்ளன. இந்த இரண்டு சேர்மங்களும் மனச்சோர்வு, பதட்டம் மற்றும் மனநிலை மாற்றங்கள் போன்ற பல உளவியல் பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது.

ஆகவே தக்காளி சாறு உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் பல மனநல பிரச்சனைகளை சரிசெய்ய முடியும்.

நீரேற்றமாக வைத்துள்ளது

உடலின் பல செயற்பாடுகள் சரியாக நடப்பதற்கு நீரேற்றமாக இருப்பது முக்கியமானதாகும்.

தக்காளி சாறு இதற்கு சிறந்த உணவாக விளங்குகிறது.
ஏனெனில் அது அதிகப்படியான நீரை கொண்ட காய்கறியாகும்.
எனவே தக்காளி சாற்றை உட் கொள்வதால் உடலை
நீரேற்றமானதாக வைத்துக்கொள்ளலாம்.

அடுத்து இந்த தக்காளி சாறு எப்படி செய்வது என்பது பற்றி பார்ப்போம்.

தக்காளி-3
உப்பு- 1சிட்டிகை
தண்ணீர் – 200 மி.மீ

செய்முறை
ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அதில் முழு தக்காளியை வைத்து வேக வைக்கவும் சிறிது நேரம் கிளறவும்.

பின்னர் தக்காளியை வெளியே எடுத்து அதன் தோலை உரித்து பிறகு அதை துண்டு துண்டாக வெட்டி அதில் இருந்து சாறு எடுக்கவும்.

அடுத்த சாற்றை வடிகட்டவும். அதை ஒரு கிளாஸில் ஊற்றி உப்பு சேர்த்தால் தக்காளி சாறு தயார்.

விருப்பத்திற்கு ஏற்ப சுவைக்காக ஒரு ஸ்பூன் சர்க்கரை அல்லது எலுமிச்சம் சாறு சேர்த்து சேர்த்துக்கொள்ளலாம்.

Leave a Reply