உங்கள் நாக்கில் இவ்வாறான அறிகுறிகள் இருக்கா? அப்படியானால் உடனே வைத்திய நிபுணரை நாடுங்கள்.

0

உடம்பு சரியில்லை என்று நாம் மருத்துவரிடம் சொன்னால் அவர் உங்களை பரிசோதிக்கும் போது நாக்கை நீட்டும் படி கூறுவார்.

ஏன் தெரியுமா?
நாக்கில் ஏற்படும் மாறுபாடுகள் உங்கள் உடல் நலம் குறித்து வெளிப்படுத்து.

நாக்கின் நிறம் உங்களுடைய ஆரோக்கியத்தையும் நோயின் தீவிரத்தை யும் வெளிப்படுத்தும்.

நாக்கை சுத்தமாக வைத்துக் கொள்ளாத போது பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றால் பல தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

அந்த வகையில் அடர்ந்த சிவப்பு :
நாக்கு அடர்ந்த சிவப்பு நிறமாக இருந்தாள் தொற்றுநோய் மற்றும் அலர்ஜி போன்றவை உங்கள் உடம்பில் இருக்க வாய்ப்பு உண்டு.

இப்படி வெள்ளை மற்றும் மஞ்சள் போன்ற நிறங்களில் காணப்படும் நாக்கை கொண்டு உடலில் ஏற்படும் பாதிப்புகளை நீங்கள் அறிய முடியும்.

சரி இனி நாக்கில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன பிரச்சனை கூறுகின்றது என்பதை பார்ப்போம்.

வெள்ளை நிற நாக்கு : நாக்கில் ஆங்காங்கே வெள்ள நிற திட்டுக்கள் காணப்படுவது தீவிர பூஞ்சை குறிக்கிறது.

லூகோபிளாக்கியா : லூகோபிளாக்கியா என்பது பொதுவாக வாயின் சளி திசுக்களில் ஏற்படுகிறது.

இது அடர்த்தியான வெள்ளை மற்றும் சாம்பல் நிறத் திட்டுக்களை உருவாக்கும்.
ஆனால் இது மோசமாக மாறும் போது வாய்வழி புற்றுநோய் மற்றும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.

கறுப்பு நாக்கு : கறுப்பு நாக்கு தசையில் எபிட்டிலியத்தில் உள்ள பாப்பிலாக்கள் வாழ்நாள் முழுவதும் வளரக்கூடியது.

இதனுடைய நீண்ட வளர்ச்சி காரணமாக கறுப்பு நிறங்கள் தோன்றும்.

எனவே இது போன்ற கருப்பு நாக்கு ஏற்படாமல் தடுக்க நல்ல வாய்வழி சுகாதாரத்தை கடைப்பிடிப்பது அவசியம். மேலும் நீரிழிவு அல்லது புற்றுநோய் நோய்களினாலும் நாக்கு கருப்பு நிறமாக காணப்படும்.

அத்துடன் நாக்கை தெரியாமல் கடிப்பது அல்லது சூடாக குடிப்பது அல்லது கொப்புளங்கள் போன்றவை நாக்கில் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள்.

ஏனெனில் அந்தப் புண்கள் புற்று நோய் புண்களாகவோ அல்லது பூஞ்சைத் தொற்றாக இருக்கலாம். ஆகவே இவ்வாறு நாக்குகளில் மாற்றம் ஏற்படும்போது ஒரு வைத்திய நிபுணரை அணுகி சிகிச்சை பெறுவது உங்களுக்கு நன்மை அளிக்கும்.

Leave a Reply