முகம் வெண்மையாக மாறுவதற்கு பீட்ரூட் மாத்திரம் போதும்.

0

பீட்ரூட்டில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது என்றும் நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
அதன் காரணமாகவே நம் உணவுகளில் அதிக அளவில் பீட்ரூட்டை சேர்த்துக் கொள்கிறோம்.

இந்த பீட்ரூட்டை பயன்படுத்தி சரும அழகையும் அதிகரிக்கலாம்.

இதன் மூலம் சருமத்தை ஆரோக்கியமாக, பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.

பீட்ரூட்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்தை மென்மையாகவும் , இளமையுடனும் வைத்துக் கொள்ளும்.

இந்த பீட்ரூட்டை பயன்படுத்தி சருமத்தை அழகாக கூடிய சில பேசியலை இப்போது பார்ப்போம்.

முகம் வெள்ளையாக 2 பீட்ரூட் பேஸ் பேக்.

தேவையான பொருட்கள்:
பீட்ரூட்- சிறிய அளவில் 1
ஊறவைத்த அரிசி – ஒரு ஸ்பூன்
கற்றாலை ஜெல் – 2 ஸ்பூன்
எலுமிச்சை1/2 துண்டு

செய்முறை :
ஒரு சிறிய அளவில் பீட்ரூட் இலை எடுத்துக்கொள்ளுங்கள்.
அவற்றை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
பின் அவற்றை மிக்ஸியில் சேர்க்கவும்.
பின் இதனுடன் ஒரு ஸ்பூன் ஊற வைத்த அரிசி,கற்றாழை ஜெல் 2 ஸ்பூன், எலுமிச்சை அரை துண்டு இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நல்ல பேஸ்ட் போல் அரைத்துக் எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது பேஸ் பேக் தயார் இதனை முகத்தில் அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.

பின்னர் 10 முதல் 15 நிமிடங்கள் வரை காத்திருக்கவும். பின்பு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

குறித்த முறையினை வாரத்தில் ஒரு முறை பின்பற்றி வர பீட்ரூட்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றும், மேலும் சருமத்தை இளமையுடன் மற்றும் பொலிவுடன் வைத்துக்கொள்ளும்.

மேலும் முகம் மென்மையாகவும் காணப்படும்.

Leave a Reply