போலி வேடம் பூண்டு நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வந்த பெண்!

0

வவுனியா – குட்செட் வீதியில் மனித உரிமைகள் அமைப்பினர் என தன்னை அடையாளப்படுத்தி நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 6,500 ரூபா பணம் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் குறித்த தொகையில் 6 பேருக்கு சிரியளவிலான பணத்தொகை வழங்கப்படுவதுடன் எஞ்சிய நிதி அனுராதபுரத்தில் உள்ள பெண்ணொருவருக்கு வழங்கி வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply