தமிழகத்தில் அதிகரித்து வரும் கருப்பு பூஞ்சை -10 பேருக்கு கண்கள் அகற்றப்பட்டுள்ளன.

0

தற்போது தமிழகத்தில் கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய சேலம் மாவட்டத்தில் இதுவரையில் கருப்பு பூஞ்சைத் தொற்றுக்கு 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப் பட்டவர்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவற்றுள் 250 க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அத்துடன் கடந்த 17ஆம் திகதி 5 பேர் குறித்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 2 பேர் சேலத்தை சேர்ந்தவர் களும் மூவர் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சேலம் மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த 400 பேர் இந்த கருப்பு பூஞ்சைத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் 95 பேரும், மற்றவர்களுக்கு தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன் கொரோனா பாதிப்பு இருந்தபோது தீவிர கருப்பு பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்பட்ட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் 10 பேருக்கு கண்கள் அகற்றப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply