சாப்பிட்டவுடன் தூங்கச் செல்கிறவர்களா நீங்கள்?

0

எமது ஊர்களில் பல கிராமங்களில் நேரத்துக்கு உணவை உண்டு சரியான நேரத்துக்கு படுத்து உறங்குவதை பார்த்து இருப்போம்.

ஆனால் நகரங்களில் வாழ்பவர்கள் இந்த முறைகளை. பின்பற்றுவது இல்லை.

பலர் சரியான நேரத்திற்கு உண்பதில்லை. இரவு நேரங்களில் தூங்கும் சமயத்தில் தான் அவர்கள் உணவை உட்கொள்கின்றனர்.

இவ்வாறு இந்த உணவுகளை காலதாமதமாக உண்பது உங்கள் உடல் சுகாதாரத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும்.

அதேபோல எளிதில் செரிமானமாகாத ஆரோக்கியமற்ற உணவுகளும் உடல் உபாதைகளை ஏற்படுத்தலாம்.

அத்துடன் உறங்குவதற்கு முன்பு இரவு உணவை தாமதமாக சாப்பிடுவது உங்கள் உடல் எடை அதிகரிப்பில் துவங்கி ஏராளமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் உடலில் சர்க்கரை அளவையும் இது அதிகரிக்கிறது.

ஆகவே உறங்குவதற்கு முன்பு உணவு உண்பதில் நாம் கவனம் செலுத்தி ஆக வேண்டும்.

மேலும் இரவு நேரத்தில் சாப்பிட சில ஆரோக்கியமான உணவுவகைகளையும் நாம் பரிந்துரைக்கின்றோம்.

நீங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதில் ஆர்வம் உள்ளவர்களாக இருந்தால் முதலில் உடல் கொழுப்பை குறைப்பதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

படுக்கைக்கு செல்வதற்கு முன்பு தேவையற்ற தின்பண்டங்களை தவிர்த்து குறைந்த கலோரி மற்றும் குறைந்த கொழுப்பு கொண்ட உணவுகளை இரவு நேர உணவாக உண்ணலாம்.

அவ்வாறு எடை இழப்பிற்கு பதிலாக எடை அதிகரிப்பை விரும்புபவர்கள் தங்கள் இரவு நேர உணவை தாமதமாக உட்கொள்ளலாம்.

ஆனால் மாலை 6 மணிக்கு பதிலாக இரவு 10 மணிக்கு உணவு உண்பவர்கள் குளுக்கோஸ் ஏற்றுக்கொள்ளும் திறன் அதிகமாகவும், ஆக்ஸிஜனேற்ற விகிதத்தை குறைவாகவும் கொண்டுள்ளர்.

அத்துடன் அதிகபடியான வயிற்று கொழுப்பு, அதிகரித்த இரத்த அழுத்தம், உயர் இரத்த சர்க்கரை மற்றும் உயர்ந்த கொழுப்பு இவை அனைத்தும் இரவு தாமதமாக உணவுகளை உண்பதால் ஏற்படும் பிரச்சனையாக உள்ளன.

இதனால் இரண்டாம் வகை நீரழிவு, இதயநோய் மற்றும் பக்கவாதம் ஆகியவை ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளன.

நாம் உண்ணும் இரவு நேர உணவும் காலை நேர சோர்வும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது.
அதாவது வயதானவர்களில் இரவு தாமதமாக உணவு உண்பவர்கள் காலையில் தூக்க கலக்கத்தை அல்லது சோர்வை சந்திக்க வாய்ப்புள்ளது.

ஆகவே ஒருவர் ஆரோக்கியமான அதிகாலை பெற வேண்டுமெனில் அவர்கள் முதலில் இரவு உணவை சரியான நேரத்தில் உண்பவர்களாக இருக்க வேண்டும்.

அத்துடன் விரைவில் செரிக்காத உணவை எடுத்துக் கொள்ளும் போது அதுவும் கூட செரிமான பிரச்சனையை ஏற்படுத்தி தூக்கம் வராமல் செய்கிறது.
எனவே விரைவில் செரிமானம் ஆகக்கூடிய உணவையே நாம் இரவு உணவாக தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஆகவே ஒவ்வொருவரும் இரவு உணவை சரியான நேரத்திற்கு எடுத்துக்கொள்ளுங்கள் இதன் மூலம் உங்கள் அடுத்த நாளை வளமானதாக மாற்ற முடியும்.

Leave a Reply