தொண்டை வலி, தொண்டை கரகரப்புக்கு முற்றுப்புள்ளி!

0

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் தொண்டை வலி, தொண்டை கரகரப்பு போன்றன ஒரு சாதாரணமான விடயமல்ல.

இந்த இரண்டும் தான் கொவிட் 19 தொற்றுக்கான ஆரம்பகால அறிகுறியாக காணப்படும்.

ஒருவேளை இது சாதாரமாண தொற்று காரணமாக இருந்தால் நீங்கள் செய்யும் வீட்டு வைத்தியங்களில் இதனை குணப்படுத்தலாம்

அப்படி குணமாகாமல் அதன் தொடர்ச்சியாக காய்ச்சல் சளி நெஞ்சு வலி என இருப்பின் உடனே மருத்துவமனையை அணுகுவது நல்லது.

அதற்கு முன் இந்த வீட்டு குறிப்புகளை செய்து பாருங்கள்:

உப்பு தண்ணீர் :
வெதுவெதுப்பான நீரில் அரை ஸ்பூன் உப்பு கலந்து தொண்டையில் படும் வாயில் ஊற்றி கொப்பளித்து துப்புங்கள்,இதனை முழுங்கி விடக்கூடாது.

இப்படி ஒரு நாளைக்கு 3 முறை செய்து பாருங்கள், இவ்வாறு மூன்று நாட்கள் தொடர்ச்சியாக செய்து வர தொண்டை வலி குறையும்.

ஆனால் கொவிட் அறிகுறியாக இருந்தால் அதற்கு இது முடிவல்ல.

உப்பு தண்ணீர் பயன்படுத்தினால் கொரோனா வைரஸ் அழியுமா.? உண்மை இது தான்..!! |  Puradsi

அடுத்ததாக அதிமதுரத்தை பார்ப்போம்.

அதிமதுரம் :
அதிமதுரம் பொடி கிடந்தாள் அதை தண்ணீரில் அரை ஸ்பூன் கொதிக்க வைத்து குடிக்கலாம்.
இது தொற்றுக் கிருமிகளை எதிர்த்துப் போராடும் ஆற்றலை கொண்டுள்ளது.

அதிமதுரம் பயன்கள் | Athimadhuram uses in Tamil | Benefits in Tamil

அடுத்தபடியாக தேங்காய் எண்ணெய் பார்ப்போம்.

தேங்காய் எண்ணெய் :
தேங்காய் எண்ணையால் வாயை கொப்பளிக்க கிருமிகள்,

தொற்றுகள் இருந்தால் வெளியேறி விடும்.
எனவே இரண்டு ஸ்பூன் வீதம் தினமும் காலை தேங்காய் எண்ணையால் வாயை கொப்பளியுங்கள்.

தேங்காய் எண்ணெயின் மருத்துவ குணங்கள்!!

மேலே குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகள் தற்காலிக வலி நிவாரணி. அவை சாதாரண தோற்றால் ஏற்பட்ட வலி எனில் குணமாகும்.

கொவிட் தொற்று என்றால் அதற்கு மேற்குறிப்பிட்ட விடயம் தீர்வு அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply