தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை!

0

நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 157 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

இந்நிலையில் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 50,187ஆக உயர்வடைந்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்ளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவற்துறை ஊடக பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply