குப்பை போல் ஆகிவிட்ட மேனியை குணப்படுத்தும் குப்பைமேனியில் இவ்வளவு பயன் இருக்கா?

0

எமது உடலில் அன்றாடம் ஏற்படும் கிருமி தாக்கத்திலிருந்து எமது உடலைப் பாதுகாக் பயன்படுத்தப்படும் செடி வகையை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம்.

அந்த வகையில் குப்பைமேனியின் பயன்கள் பற்றி பார்ப்போம்:

குப்பை போல் ஆகிவிட்ட மேனியை குணப்படுத்துவதால் இதற்கு குப்பைமேனி என பெயர் பெற்றுள்ளதாக மூலிகை அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த செடி குறிப்பாக வீதியோரங்கள், தோட்டங்கள் மற்றும் காடுமேடு எங்கும் காணப்படும்.

இதை யாரும் வளர்ப்பதில்லை, காடு மேடுகளில் தானாகவே வளரும் தன்மையை கொண்டது.

இந்த குப்பை மேனி ஒரு சிறிய செடியாக வளரும் என்பதுடன் இதன் இல்லை பச்சை பசேலென முக்கோண வடிவமாக ஓரங்களில் அரும்பாக காணப்படும்.

குப்பைமேனி நெஞ்சுக்கோழையை நீக்கும், இருமலைக்கட்டுப் படுத்தும், விஷக்கடி, இரத்த மூலம், வாத நோய், ஆஸ்துமா, குடற்புழுக்கள், மூட்டுவலி மற்றும் தலைவலி போன்ற நோய்களை குணப்படுத்தவும் இது பயன்படுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply