ஐஸ் கட்டி மசாஜ் ..!!

0

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு
எலுமிச்சைச்சாறு
வெள்ளரிக்காய்
சர்க்கரை
சோற்றுக்கற்றாழை
ரோஜா இதழ்

முதலில் சிறிதளவு உருளைக்கிழங்கை எடுத்து கொள்ளவும் அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதன் வழவழப்பு தன்மை போகும் வரை தண்ணீரில் கழுவி எடுத்து வைக்கவும்.

இந்த கழுவிய உருளைக்கிழங்கை அரைத்து சாறுபிழிந்து ஐஸ் ட்ரேயில் வைக்கவும். இரவு தூங்கும் முன் முகத்தில் தடவி வந்தால் இரத்த குழாய்கள் முதலில் சுருங்கி இரத்த ஓட்டமும் குறையும் அதன் பிறகு இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி முகத்தை பொழிவு பெற செய்கிறது.

ஐஸ் கட்டியில் உருளைக்கிழங்கில் நார்ச்சத்துக்கள் இருப்பதால் சருமத்தின் வளவளப்பை அதிகப்படுத்திக்கிறது. முகத்தில் உள்ள கரும் திட்டுக்களையும் சரி செய்கிறது.

அரை டி ஸ்புன் எலுமிச்சை சாறை எடுத்து கொள்ளவும். அதில் சிறிதளவு தண்ணீர் மற்றும் வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் டேப்லெட் கரையும் வரை கலக்கவும்.

வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் டேப்லெட் கலந்து வைத்ததை ஐஸ் ட்ரேயில் வைக்கவும். இதனை குளிப்பதற்கு முன்பு தடவி வந்தால் முகம் தங்கம் போல் மின்னும். எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி இருப்பதால் சருமத்தில் உள்ள மருக்களை வேருடன் அழிப்பதற்கு பயன்படுக்கிறது.

அதுமட்டுமில்லாமல் சிலருக்கு சிறு வயதிலேயே முதுமை தோற்றம், முக சுருக்கம் ஏற்படும். அவர்கள் இந்த பேஸ் பேக்கை பயன்படுத்தினால் உங்களுடைய தோற்றம் அழகாக மாறிவிடும்.

Leave a Reply