மூக்கில் கருமை மறைய..!!

0

சிறிதளவு கடலை மாவை எடுத்து ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் போல் தயார் செய்துக்கொள்ளவும். அதனை மூக்கின் மேல் தடவி, கீழிருந்து மேலாக மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் மூக்கில் உள்ள கரும்புள்ளிகள் நாளடைவில் மறைந்துவிடும்.

சிறிதளவு எலுமிச்சை சாறில் சர்க்கரையை சேர்த்து பேஸ்ட் போன்று ஒரு கலவையை தயார் செய்துக்கொள்ளவும். அந்த பேஸ்டை, மூக்கின் மேல் தடவி ஸ்கரப் செய்து கழுவினால், மூக்கில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள் முற்றிலும் நீங்கிவிடும்.

பட்டையை இடித்து பொடி செய்து அதனுடன் எலுமிச்சை சாறு சிறிதளவு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, மூக்கில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் வைத்து, பின் தண்ணீர் தொட்டு ஸ்கரப் செய்து கழுவினால், கரும்புள்ளிகள் நீங்கும்.

ஓட்ஸ் பொடியை தயிருடன் சேர்த்து கலந்து, முகத்தில் தேய்த்து கழுவி வந்தால், முகத்தில் உள்ள அழுக்குகள் மட்டுமின்றி கரும்புள்ளிகளும் நீங்கும்.

Leave a Reply