பச்சை வெங்காயம் பயன்கள்..!!

0

வெங்காயத்தை பச்சையாக கடித்து சாப்பிட்டால் வாய் புண் மற்றும் கண்வலி குணமாகும்.

காரணம் வெங்காயத்தில் அதிகளவு உள்ள ரிபோபிளவின் என்னும் பி குருப் வைட்டமின் ஆகும்.

சிறிய வெங்காயமோ அல்லது பெரிய வெங்காயமோ இரண்டும் ஒரே மாதிரியான மருத்துவ குணத்தை அளிக்கும் தன்மை வாய்ந்தது.

வெங்காயத்தை வதக்கியோ அல்லது வேகவைத்தோ எப்படி வேண்டும் என்றாலும் சாப்பிடலாம்.

இவ்வாறு சாப்பிடுவதால் வெங்காயத்தில் உள்ள நறுமணம், சுவை மற்றம் மருத்துவ குணம் முழுமையாக கிடைக்கிறது.

சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் தினமும் பச்சை வெங்காயம் சாப்பிட்டால் சிறுநீரக பிரச்சனை குணமாகும்.

இரத்தம் விருத்தியாக தினமும் பச்சை வெங்காயம் சாப்பிட வேண்டும்.

செரிமானம் அடைய தினமும் வெங்காயத்தை பச்சையாகவோ, சமைத்தோ அல்லது மற்ற உணவுகளுடன் கலந்தோ சாப்பிட்டால் செரிமானம் பிரச்சனைகள் குணமாகும்.

காய்ச்சல், சிறுநீரக கோளாறு, இருமல் போன்றவை குணமாக பெரிய வெங்காயம் ஒன்றை மிக்ஸியில் அரைத்து இரசமாக வைத்து அருந்தினால் குணமாகும்.

வெங்காயம் உடலுக்கு குளிர்சி அளிக்கும் மருந்து என்பதால் அளவுடன் தான் சாப்பிட வேண்டும்.

உடல் ஆரோக்கியத்துடன் இருக்க 100 கிராம் வெங்காயத்தை தினமும் இரண்டு அல்லது மூன்று வேளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

குளிர்காய்ச்சல் உள்ளவர்கள் வெங்காயத்துடன் மிளகையும் சேர்த்து சாப்பிட வேண்டும்.

Leave a Reply