தேவையான மூலிகைகள்
கொள்ளு – 500 கிராம்
திரிபலா பௌடர் -250 கிராம்
சங்கல் கோச்டம் (Chengalva Kostu ) – 50 கிராம்
லோத்திரம் (Lodhra ) – 50 கிராம்
வசம்பு – 100 கிராம்
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சிசேம் ஆயிலுடன் கலந்து கொள்ள வேண்டும்.
முகம் மேல் நோக்கி உள்ள படி படுத்துக்கொள்ள வேண்டும். இதனை முதலில் இடதுபுறமிருந்து ஆரம்பிக்க வேண்டும்.
கொழுப்புகள் உள்ள இடத்தில் இடமிருந்து வலமாக 4-6 முறை கிடைமட்டமாக மசாஜ் செய்ய வேண்டும்.
பின்னர் இடது கையை தொப்புளுக்கு வலது புறத்தில் வைத்து இரண்டு கைகளால் மெதுவாக கடிகார முள் திசையில் மசாஜ் செய்ய வேண்டும்.
பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வட்டத்தை பெரிதாக்கி வயிறு முழுதும் மசாஜ் செய்து, கொஞ்சம் கொஞ்சமாக வட்டத்தை சிறிதாக்கி வயிற்றின் நடுப்பகுதியை அடைய வேண்டும்.



