கோடைகாலத்தில் முலாம்பழம் சாப்பிடுங்க…!

0

முலாம் பழத்தில் சர்க்கரையின் அளவும், கலோரியும் குறைவு. அதனால், உடல் எடையைக் குறைக்க விருப்புகிறவர்களுக்கு ஏற்றப் பழமாகவும் முலாம் பழம் இருக்கிறது.

குறிப்பாகத் தோல் அழற்சியைத் தணிக்க பழத்தின் சாறுகள் பயனுள்ளவையாக இருக்கும். இதில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது.

இதனால் சருமம் புத்துயிர் பெறும். முலாம்பழத்தில் இனோசிட்டால் இருப்பதால் தலைமுடியில் முலாம்பழ கூழ் தடவி அதன் பிறகு கழுவுவதன் மூலம் முடி உதிர்தலை தடுக்கலாம்.

முலாம் பழ சாற்றை குடிப்பதன் மூலம் வயதான சுருங்கிய சருமத்தை சரிசெய்யலாம்.

மேலும் டார்க் உதடுகள்மீது அரைத்த முலாம்பழத்தை தடவினால் சரியாகத் தொடங்கும்.

கோடைகாலங்களில் வெப்பம் காரணமாக அனல் கற்று வீசுவதால் உடலில் இருகின்ற நீர்சத்துகள் வெளியேறி, உடல் சுலபத்தில் வெப்பமடைகிறது.

இதனால் நமக்கு விரைவில் சோர்வு மற்றும் உடலில் உப்புகள் இழப்பு ஏற்படுகிறது.

இதனைப் போக்க முலாம் பழங்களைச் சாப்பிடலாம்.

Leave a Reply