ப்ளூபெர்ரி பழங்கள்
ப்ளூபெர்ரி பழங்களில் வைட்டமின் சி அதிகம் உள்ளது மற்றும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் வளமாக உள்ளது. ஒருவேளை உங்களுக்கு ப்ளூபெர்ரி பழங்கள் சாப்பிட கிடைக்காவிட்டால், வைட்டமின் சி அதிகம் நிறைந்த பழங்களான் நெல்லிக்காய், ஸ்ட்ராபெர்ரி, ஆரஞ்சு போன்றவற்றை உட்கொள்ளுங்கள்.
சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் பழங்களில் உள்ள வைட்டமின் சி இரும்புச்சத்தை உறிஞ்ச உதவும். எனவே சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்றவற்றை பிரசவத்திற்கு பின் பெண்கள் அதிகம் சாப்பிடுவது நல்லது. மேலும் இப்பழங்கள் உடல் எடையையும் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.
பருப்பு வகைகள்
ஒருவேளை நீங்கள் சைவ உணவாளர்களாக இருந்தால், பருப்பு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், உடலுக்கு வேண்டிய புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துக்கள் கிடைக்கும். இவை செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல், செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.
நட்ஸ்
கர்ப்ப காலத்திலும் சரி, பிரசவத்திற்கு பின்னும் சரி, நட்ஸை ஸ்நாக்ஸ் நேரத்தில் எடுப்பதால், அதில் உள்ள சத்துக்கள் கிடைத்து, உடலுக்கு வேண்டிய ஆற்றலும் கிடைக்கும். எனவே பாதாம், வால்நட்ஸ், ஆளி விதை போன்றவற்றை தேர்ந்தெடுத்து உட்கொள்ளுங்கள். ஆனால் முந்திரி, உப்பு சேர்த்து வறுத்த பிஸ்தா போன்றவற்றை உட்கொள்ளாதீர்கள்
புரோட்டீன் உணவுகள்
மீன், முட்டை, சிக்கன் போன்றவை தாய்ப்பாலின் ஊட்டச்சத்துக்களின் அளவை அதிகரிக்க உதவுவதோடு, அதில் அதிகப்படியான தெர்மோஜெனிக் அளவு உள்ளதால், அதிகளவு கலோரிகளை எரிக்க உதவும். அதுமட்டுமின்றி, மீனில் ஒமேகா-3 ஃபேட்டி அமிலம் உள்ளது. இது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும்.
குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள்
பால் பொருட்களைப் பிரசவத்திற்கு பின் பெண்கள் உட்கொண்டால், அதனால் தாய்ப்பாலில் கால்சியத்தின் அளவு அதிகரிக்கும். முக்கியமாக மோரை அதிகம் குடிக்கவும் மற்றும் நீர்ச்சத்துடன் இருக்க தண்ணீரை அதிகம் பருக வேண்டும். இதனால் சோர்வு நீங்கி, கொழுப்புக்களும் வேகமாக கரையும்.



