பிரபல இயக்குனர் அருண் வைத்தியநாதனுக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி.

0

தமிழ் திரையுலகில் மிகவும் அறிமுகமான இயக்குனர்களில் ஒருவராக அருண் வைத்தியநாதன் விளங்குகின்றார்.

இவர் தமிழ் திரையுலகில் முக்கிய இயக்குனர் வரிசையில் இடம் பிடித்தவர்.

அத்துடன் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்று அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படம் பல சர்வதேச விருது விழாக்களில் திரையிட்ட தோடு விருதுகளையும் அள்ளிக் குவித்தது.

இதனைத் தொடர்ந்து கல்யாண சமையல் சாதம், மலையாள திரையுலகில் மோகன்லாலை கதாநாயகனாக வைத்து பெருச்சாழி என்ற படங்களை இயக்கினார்.

இவர் இறுதியாக அர்ஜுன் கதாநாயகனாக நடித்த நிபுணன் திரைப்படத்தை இயக்கினார்.

அதற்கு பின்னர் குழந்தைகளை வைத்து குழந்தைகள் விரும்பும் வகையிலான புதிய திரைப்படத்தை இயக்கி வருகின்றார்.

இந்நிலையில் இயக்குநர் அருண் வைத்தியநாதனுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் படப்பிடிப்புக்கான கும்பமேளா, வாரணாசி உள்ளிட்ட பகுதியில் 28 நாட்கள், 160 நபர்களுடன் படப்பிடிப்பை முடித்து திரும்பிய பொழுது அவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் அவர் தனக்கு ஒமிக்ரோன் தோற்று என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது என்று பதிவு செய்துள்ளார்.

Leave a Reply