கணவனின் ஆயுளைப் பெருக்கும் குத்துவிளக்கு பூஜை வழிபாடு.

0

இந்து மதத்தில் பூஜைகளும் விளக்குகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அதிலும் காமாட்சி அம்மன் விளக்கு,குத்துவிளக்கு இரண்டும் சிறப்பம்சம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.

அவை இல்லாத வீடுகளே இல்லை என்று கூறலாம்.

மிகவும் சிறப்பு வாய்ந்த நாட்களான தை வெள்ளிக்கிழமை, பௌர்ணமி, ஆடி செவ்வாய் மற்றும் வெள்ளி, சதுர்த்தி, பஞ்சமி, ஏகாதசி ஆகிய திகதிகளில் மற்றும் விசேஷமான நவராத்திரி போன்ற நாட்களில் குத்துவிளக்கை ஏற்றி வழிபட்டால் எந்த குறைவும் இல்லாத செல்வத்தை பெறலாம்.

குத்துவிளக்கு தெய்வ அம்சம் பொருந்தியதாக கருதப்படுகின்றது.

குத்துவிளக்கு அம்பாளின் வடிவாகவே பார்க்கப்படும்.

குத்து விளக்கை மும்மூர்த்திகளின் பிரம்மாவாகவும் கொள்ளலாம்.
இதன் அடிப்பாகம் படைக்கும் தெய்வமான பிரம்மதேவரின் அம்சம் என்றும், நீண்ட நடுப்பகுதி காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவின் அம்சம் என்றும், மேற்பகுதி அளித்தல் கடவுளான சிவபெருமானின் அம்சம் என்றும் கூறப்படுகின்றது.

அது மாத்திரமன்றி விளக்கிற்கு எண்ணைய் பயன்படுத்துவதை விட நெய் தான் சிறந்தது.

பசும் நெய் கொண்டு விளக்கு ஏற்றினால் லக்ஷ்மி தேவியின் அருள் கிடைக்கும்.

குத்து விளக்கில் ஊற்றும் நெய் நாதம்எனவும், திரியை பிந்து எனவும், அதில் பிரகாசமாக எரியும் தீ மலை மகள் எனவும் போற்றப்படுகிறது.

குத்து விளக்கை நன்றாக துலக்கி,மஞ்சள் தடவி,குங்குமம் இட்டு, பூச்சுற்றி அலங்காரம் செய்து நாள் கிழமைகளில் ஏற்ற வேண்டும்.

அந்த வகையில் ஐந்து முக விளக்கை வீட்டில் ஏற்றினால் சகல சௌபாக்கியமும் நமக்கு கிடைக்கும்.

குத்துவிளக்கின் ஐந்து முகங்களும் அன்பு, மன உறுதி, நிதானம், சமயோகித புத்தி, பொறுமை என்னும் ஐந்து குணங்களை நமக்கு எடுத்துச் சொல்கின்றன.

வீட்டில் நாம் குத்து விளக்கேற்றி பூஜை செய்யும் நாட்களில் தலை சீவ கூடாது.

வீட்டினை பெருக்கக்கூடாது, விளக்கை ஏற்றிய உடனே வெளியில் செல்லக்கூடாது, அந்த சமயம் துணி துவைப்பது, தலைக்கு குளிப்பது போன்ற வேலைகளை செய்வதை தவிர்ப்பது நல்லது.

அது அம்பாள் வரும் நேரம் என்பதால் அவளை நாம் வரவேற்கும் நேரம் என்பதால் அவளை நாம் வரவேற்கும் விதமாக முகத்தை கழுவி,பொட்டிடுட்டு, தலையைப் திருத்திக் கொள்ள வேண்டும்.

அத்துடன் இவ்வாறு ஏற்றும் விளக்கை கிழக்கு திசை நோக்கி வைப்பது சிறப்பு.

சிலர் வீட்டுக்குள்ளேயே குத்து விளக்கிற்கு அர்ச்சனை செய்வதுண்டு.

திருவிளக்கு பூஜை செய்யும் போது விளக்கை வெறும் தரையில் வைக்காமல், தலைவாழை இலை யிலோ, தாம்பாளத் தட்டில் வைத்து பூஜை செய்ய வேண்டும்.

அப்படியே அர்ச்சனை செய்த குங்குமத்தை எடுத்து சுமங்கலிகள் திருமங்கலத்திலும், தலை உச்சி வகிடுலும் வைத்து வர கணவர் தேக ஆரோக்கியத்துடன் நலமுடன் வாழ்வார்.

Leave a Reply