எந்தக் கடவுளிடம் எத்தனை முறை வலம் வந்து நமது கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும்!

0

நாம் ஒவ்வொருவரும் ஆலயத்திற்கு சென்று கடவுளை வழிபடுவது வழக்கம்.

அவ்வாறு நாம் ஆலயத்திற்கு சென்று கடவுளை வழிபடும் போது
எந்தக் கடவுளிடம் எத்தனை முறை வலம் வந்து நமது கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

விநாயகரை ஒரே ஒரு முறைதான் வலம் வர வேண்டும்.

ஈஸ்வரனையும், அம்மனையும் மூன்று முறை வலம் வர வேண்டும்.

அரச மரத்தை 7 முறை வலம் வரவேண்டும்.

சித்தர்கள் மற்றும் மகான்களின் சமாதியை 4 முறை வலம் வரவேண்டும்.

நவக்கிரகங்களை 9 முறை வலம் வரவேண்டும்.

சூரியனை இரண்டு முறை வலம் வரவேண்டும்.

தோஷ நிவர்த்தி செய்வதற்காக பெருமாளையும் தாயாரையும் வணங்குபவர்கள் 4 முறை வலம் வரவேண்டும்.

அவ்வாறு கோவிலுக்குள் ஆலயம் பலிபீடம், கொடிக்கம்பம் முன்பு தான் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும் என புராணங்கள் குறிப்பிடுகின்றன.

Leave a Reply