தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா?

0

நாம் ஒவ்வொருவரும் தரையில் அமர்ந்து சாப்பிடும் பழக்கம் ஆதிகாலத்திலிருந்தே உள்ளது.

தற்போது சாப்பாட்டு மேசையில் உட்கார்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டோ அல்லது படுக்கையில் உட்கார்ந்து கொண்டு சாப்பிடுவது வசதியாக இருப்பது போல் நமக்கு தோன்றலாம்.

நான் கால்களை குறுக்காக மடக்கி, சம்மணம் போட்டு தரையில் உட்காரும் போது இயல்பாகவே ஒரு அசன நிலைக்கு வந்து விடுகிறோம்.

இதற்கு “சுகாசனா ” என்ற பெயர்.

இப்படி உட்காரும்போது நாம் இயல்பாகவே குனிந்து நிமிர்ந்து சாப்பிடுகின்றோம்.

இதனால் வயிற்றுத் தசைகள் சுருங்கி விரிந்து, அமிலம் சுரந்து நாம் சாப்பிடும் உணவை சீக்கிரமாக செரிக்க வைக்கிறது.

மேலும் தரையில் அமர்வதால் முழங்கால் மூட்டுகளும், இடுப்பு எலும்புகளும் வலுவடையும்.

மற்றும் உடலில் வலிமை அதிகரித்து ஆயுளும் கூடுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply