எலுமிச்சம்பழச்சாறு பானத்துடன் மஞ்சள் சேர்த்து குடிப்பதால் இவ்வளவு நன்மையா?

0

தேசிபழச் சாறு மற்றும் மஞ்சள் கலந்த பானம் எமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடம்பிலுள்ள நச்சுகளை நீக்கவும் உதவுகிறது.

இந்த மஞ்சள் எமது பாரம்பரியங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் மிகச் சிறந்த மூலிகை பொருளாகக் காணப்படுகின்றது.

மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருந்தால் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் மஞ்சள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.

அதே நேரத்தில் எலுமிச்சம்பழச்சாற்றுடன் நீங்கள் சிறிதளவு மஞ்சள் கலந்து குடிப்பது உங்களுக்கு ஒரு ஆரோக்கியமான பானமாக இருக்கும்.

இந்த தேசிபழம் ஒரு அமிலத் தன்மையுடைய பழமாகும். இதில் நிறைய ஆண்டி ஆக்சிடென்ட்கள், அழற்சி எதிர்ப்பு பண்புகள், புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் போன்றவை காணப்படுகிறது.

இந்த எலுமிச்சம்பழச்சாறு நம் உடலில் உள்ள PH அளவை பராமரிக்க உதவுகிறது.

இது பாதிப்படைந்த தோல் செல்களை புத்துயிர் செய்ய உதவுகிறது.

சரும சுருக்கங்கள், சரும வயதாகுதல் போன்ற சரும பிரச்சனைகளை களையவும் இந்த எலுமிச்சம்பழச்சாறு உதவுகிறது. சிறுநீரகம் மற்றும் பித்தப்பையில் போன்றவற்றைச் சுத்தம் செய்யவும் பயன்படும்.

மஞ்சள்

மஞ்சள் பண்டைய காலத்தின் ஒரு மசாலா பொருளாக காணப்பட்டது.

மஞ்சளில் குர்மின் என்ற பொருள் உள்ளது.

இதில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸினேற்ற பண்புகள் காணப்படுகிறது.

இதில் பாக்டீரியா மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் காணப்படுவதால் நோய்த்தொற்றுகள்,ஒவ்வாமை,காய்ச்சல் போன்ற சிக்கல்களை தடுக்கிறது.

இதிலுள்ள குர்குமின் புற்றுநோய் செல்களை அழிக்க கூடியது.

ஆகவே இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக கலப்பதால் நாம் எந்த வகையான நன்மைகளை பெறமுடியும் என்பதை பார்க்கலாம்.

மஞ்சள் மற்றும் தேசிச்சாறு:

எலுமிச்சம்பழச்சாறு : 4 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் :சிறிதளவு
பட்டை பொடி : சிறிதளவு
தயாரிக்கும் நேரம் : 5 நிமிடம்

செய்முறை :
.ஒரு டம்ளர் அளவிற்கு தண்ணீரை எடுத்து அதில் 1/2 அளவிற்கு எலுமிச்சம்பழச்சாறு , சிறிதளவு மஞ்சள் மற்றும் பட்டை பொடியை சேர்த்துக் கொள்ளுங்கள்.

. இப்பொழுது மஞ்சள் அடியில் தங்காத அளவிற்கு நன்றாக கலக்குங்கள்.

. இந்த பானத்தை தினமும் வெறும் வயிற்றில் குடித்து வாருங்கள்.

.இரவு நேரங்களில் குடிக்கவும் இந்த பானம் ஏற்றது.

அத்துடன் இதனுடன் நீங்கள் ஆப்பிள்,வாழைப்பழம் போன்ற மற்ற பழங்களை எடுத்துக்கொள்ளலாம்.

அத்துடன் கல்லீரல் பிரச்சனை இருப்பவர்கள், பித்தப்பையில் கற்கள் இருப்பவர்களும் இந்த பானத்தை தவிர்க்க வைக்கவேண்டும்.

Leave a Reply