இசாலின்யின் மரணம் தொடர்ப்பில் உரிய விசாரணைகள்பக்க சார்பின்றி இடம்பெற வேண்டுமென நாட்டில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களை கண்டித்தும் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.
இதற்க்கமைய மன்னார் மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட பெண்கள் விழிப்புணர்வுன் சங்க்கத்தின் பங்களிப்புடன் குறித்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.
மேலும் மன்னார் மெசிடோ நிறுவனத்தின் தலைவர் ஜாட்சன் பிகிராடோ, சட்டத்தரணி, பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
அத்துடன் இந்த கவனியீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு வகையான வாசகங்களை அந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



