ஊழியர்களை தொழிலுக்காக இணைத்து கொள்ளும் வயது எல்லையை 18 ஆக அதிகரிப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதனை மேலும் 2 மாதங்களில் நாடாளுமன்றில் முன்வைத்து சட்டமாக்குவதற்கு தீர்மானம் எடுக்கப்படும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு சபை அறிவித்துள்ளது.
அத்துடன் 1956ஆம் இலக்க 47ஆம் சட்டத்தின் படி 14 வயதிற்கு மேற்பட்டவர்களும் வேலைக்கு செல்லமுடியும் என்ற சட்டம் அமுலில் இருந்தது.
எனினும் கடந்த ஜனவரி மாதம் ஊழிய வயது எல்லை ஆனது 16 ஆக அதிகரிக்கப்பட்டது.
இதனடிப்படையில் 16 வயதுடைய நபரொருவரை வேலைக்கு அமர்த்தினாலும் கூட அவரை ஆபத்தான வேலையில் ஈடுபடுத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சிறுவர் தொழிலாளர்களை இல்லாது செய்யும் நோக்கிலேயே புதிய திருத்தத்தின் படி ஊழிய வயது எல்லை 18 ஆக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த சட்டத்தினை தொழில்,நீதி மற்றும் கல்வி அமைச்சுடன் இணைந்து அமுல்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.



