கொவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் நேற்றைய தினம் மேலும் புதிய தொற்றாளர்களாக 1,721பேர் அடையாளங் காணப்படுள்ளனர்.
இதற்கமைய இவ்வாறு தொற்று உறுதியானவர்களில் 1, 714 பேர் புத்தாண்டுக் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்றும் ஏனைய 7 பேரும் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் நாட்டில் கொவிட் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 291,298 ஆக அதிகரித்துள்ளது.
குறித்த தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 246,755 ஆக உயர்வடைந்துள்ளது.
இதுவரை காலமும் நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,959 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



