மன அழுத்தத்தை போக்க வல்லது ஏலக்காய்.

0

மனிதர்களுக்கு அதிகமான பயன்களை கொடுக்கின்றது ஏலக்காய்.

இந்த ஏலக்காய் உண்பதால் உடலுக்கு பல நன்மைகள்உண்டாக்கும்.

உலக அளவில் ஏலக்காயை அதிக விலை மதிப்பு கொண்ட மசாலா பொருளாக காணப்படுகின்றது. அதன் சுவை,மணம் உள்ளிட்ட பண்புகளால், பானங்கள் முதல் இனிப்பு வகைகள் வரை தயாரிக்க ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது.

இப்படிப்பட்ட இந்த ஏழைக்காய் பல்வேறு வகையான மருத்துவ குணாதிசயங்கள் கொண்டவையாக காணப்படுகின்றது.

குறிப்பாக உணவு வகைகளுக்கு ஏலக்காய் மணம், சுவையை அளிப்பதோடு மட்டுமல்லாமல், பல்வேறு மருத்துவ பயன்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

ஆதிகாலம் தொட்டு இது சமையலில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

அத்துடன் ஆயுர்வேத மருத்துவத்தில் ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கின்றது.

வாயில் ஏற்படும் தொற்றுக்கள்,தொண்டையில் ஏற்படும் பாதிப்புகள், மார்பு பகுதியில் ஏற்படும் சுணக்கங்கள், வாய்வு சம்பந்தமான கோளாறுகள், விஷக்கடி உள்ளிட்டவைகளுக்கு இந்த ஏலக்காய் சிறந்த தீர்வு அளிப்பதாக கருதப்படுகிறது.

குறிப்பாக பச்சை ஏலக்காய்யில் மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன.

இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், சோடியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, காப்பர், மாங்கனீஸ் ஆகிய சத்துக்கள் காணப்படுகின்றன.

அந்த வகையில் ஏலக்காயின் மருத்துவ குணங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

ஏலக்காயை தினமும் உணவில் சேர்த்து வந்தால் உயர் இரத்த அழுத்த பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். இது இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.
சிறுநீரைப் பெருக்கி உடலில் உள்ள கழிவுகளை அகற்றுகிறது.

அத்துடன் ஆஸ்துமா மற்றும் வீசிங் பிரச்சினைகளை கொண்டவர்கள் அதற்குரிய மருந்துகளுடன் சேர்த்து ஏலக்காய் சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.

நுரையீரலுக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவை அதிகரித்து எளிதாக சுவாசிக்க உதவுகிறது.

ஏலக்காய் எண்ணெய் முகத்தில் தடவி வந்தால் சருமத்திலுள்ள துளைகள் அடைக்கப்பட்டு, சருமம் பொழிவு கொண்டதாக மாறும்.

மேலும் ஏலக்காய் எண்ணெய் தொடர்ந்தும் பயன்படுத்தி வந்தால் உதடு வெடிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு இடம் இருக்காது.

Leave a Reply