முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் உடனே நீங்க என்ன செய்ய வேண்டும்?

0

முகத்தில் பருக்கள் வந்து நாளடைவில் அது கரும்புள்ளியாக மாறி வதனால் முக அழகையே மாற்றி விடுகின்றது.

முகத்தில் ஏற்படும் கரும்புள்ளி நீங்குவதற்கு கடைகளில் விற்க கூடிய கெமிக்கல் உபயோக படுத்தி தயாரிக்கின்ற கிரீம் வகைகளை முகத்தில் போடுவதால் சருமத்திற்கு அதிக பாதிப்புகளை உருவாக்குகின்றது.

இதனால் வீட்டில் உள்ள இயற்கைப் பொருட்களை வைத்து முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை எப்படி நீக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

முகக் கரும்புள்ளியை நீக்குவதற்கு எளிய டிப்ஸ்
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு
தக்காளி
எலுமிச்சம் சாறு- சிறிதளவு

செய்முறை விளக்கம் :
முக சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்க முதலில் உருளைக்கிழங்கு மற்றும் தக்காளியை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

இதனை மிக்ஸி ஜாரில் பேஸ்ட் போன்று அரைத்து சிறிதளவு எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கொள்ளவும், அடுத்து அரைத்து வைத்துள்ள ஐஸ் ட்ரேயில் ஊற்றி வைக்கவும்.

ஐஸ் ட்ரேயில் ஊற்றிய பின் ஒரு இரவு மட்டும் பிரீஸரில் வைத்தால் நன்றாக கட்டியான தன்மைக்கு வந்துவிடும்.

இந்த ஐஸ் கட்டியினை இரவு படுக்கைக்கு முன்பு முகத்தினை சுத்தம் செய்துவிட்டு மசாஜ் போல் செய்ய வேண்டும்.

இந்த டிப்ஸை பின்பற்றினால் முகத்தில் ஏற்பட்டுள்ள கரும்புள்ளிகள் பருக்கள் மறைந்துவிடும்.

Leave a Reply