உங்கள் முகத்தை வெண்மை நிறைந்ததாக வைத்திருக்க வாழைப்பழ ஃபேஸ் மாஸ்க்!

0

பொதுவாக பழங்களைப் பயன்படுத்தி முகத்திற்கு பேசியல் செய்வதன் மூலம் சருமம் வெள்ளையாகவும் மென்மையாகவும் ஆரோக்கியம் நிறைந்ததாகவும் ஆகும் காட்சியளிக்கும்.

இதனடிப்படையில் வாழைப் பழத்தை பயன்படுத்தி சரும அழகு எப்படி அதிகரிக்கலாம் என்பதைப்பற்றி பார்ப்போம்

வாழைப்பழத்தோலை பயன்படுத்தி ஃபேஸ் மாஸ்க் எவ்வாறு செய்வது...?

வாழைப்பழ ஃபேஸ் மாஸ்க்

சரும அழகை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த வாழைப்பழ ஃபேஸ் மாஸ்க்கை முகத்திற்கு பயன்படுத்தி பாருங்கள்.

இதன் மூலம் நிரந்தர சரும அழகை தங்களால் பெற முடியும்.

இதற்கு தேவையான பொருட்கள் பற்றி பார்ப்போம்.

வாழைப்பழம் -ஒன்று
தயிர்- ஒரு ஸ்பூன்
பால் பவுடர்- ஒரு ஸ்பூன்
தேன்- ஒரு ஸ்பூன்
எலுமிச்சை சாறு- ஒரு ஸ்பூன்

செய்முறை:
ஒரு வாழைப்பழத்தை எடுத்து கொள்ளுங்கள். அவற்றில் உள்ள தோல் பகுதியை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக கட் செய்து மிக்ஸியில் தண்ணீர் ஊற்றாமல் பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளுங்கள்.

பின் ஒரு சுத்தமான பவுலை எடுத்துக் கொள்ளுங்கள் அவற்றில் அரைத்த வாழைப்பழம் பேஸ்ட் 2 ஸ்பூன், தயிர் ஒரு ஸ்பூன், பால் பவுடர் ஒரு ஸ்பூன், தேன் ஒரு ஸ்பூன் மற்றும் எலுமிச்சம் சாறு ஒரு ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

Importance of Face Masks - Face Mask- Beauty Tips- Face Packs- Fresh Skin-  Young Looking Skin- Softer- Smooth Paste- Banana Paste- Milk Powder |  Thandoratimes.com |

இப்பொழுது பேஸ் மாஸ்க் தயார்.
இதனை எப்படி சருமத்தில் அப்ளை செய்யலாம் என்பதை பற்றி அடுத்ததாக பார்ப்போம்.

பயன்படுத்தும் முறை:
முகத்தை சுத்தமாக கழுவிக் கொள்ளுங்கள் பின் தயார் செய்து வைத்துள்ள இந்த வாழைப்பழ ஃபேஸ் மாஸ்க்கை முகத்தில்நன்றாக அப்ளை செய்யவேண்டும்.

பின்னர் 15 நிமிடங்கள் வரை காத்திருந்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

இவ்வாறு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்துவர சருமத்திலுள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கும்.

சருமத்தில் உள்ள கருமைகள் அனைத்தும் அகன்று சருமம் மென்மையாக காணப்படும்.
மேலும் தொடர்ந்து இந்த டிப்ஸினை செய்து வருவதினால் முகம் வெண்மையான தோற்றத்துடன் காட்சியளிக்கும்.

Leave a Reply