மாதுளம் பழத்தை உட் கொள்வதால் கிடைக்கும் மருத்துவ பயன்கள்.

0

உடல் ஆரோக்கியத்திற்காக மனிதர்கள் தமது அன்றாட வாழ்கையில் ஒவ்வொரு வகையான பழங்களை உண்டு வருகின்றனர்.

அந்த வகையில் மாதுளம் பழத்தை உட் கொள்வதால் கிடைக்கும் மருத்துவ பயன்கள்:

இந்த மாதுளம் பழத்தின் விதைகள் நம் தோல்களில் ஏற்படும் காயங்கள் மற்றும் தழும்புகளை குணமாகும் சக்தி கொண்டவை.

அத்துடன் இந்த மாதுளம் பழத்தின் சாறு தலை முடியின் வேர்களை உறுதிப்படுத்தும் என்பதுடன் தலையில் ரத்த ஓட்டத்தை சீராக்கி முடி வளர்ச்சியை தூண்டும்

தினமும் மாதுளம் பழத்தை சாப்பிட்டால் மூளையிலுள்ள நரம்பியல் கடத்திகள் இயற்கையாகவே தன் சக்திகளை அதிகரித்து மூளையை சுறுசுறுப்பாக்கும் ஞாபக சக்தியையும் அதிகரிக்கச் செய்யும்.

இந்த மாதுளம்பழ சாறு கர்ப்பிணிப் பெண்கள் தினமும் குடித்து வந்தால் குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக வளர துணை புரியும், அத்துடன் கர்ப்பப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.

மாதுளை வயிற்றில் குவிந்துள்ள கொழுப்புகளை நீக்கும் தன்மை உடையது.
செரிமான பிரச்சனைகளை சீராக்கி உடல் எடை குறைவதற்கும் , சர்க்கரை நோயை குணப்படுத்துவதற்கு இது பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்கள் எதற்காக மாதுளம் பழம் சாப்பிட வேண்டும்? | www.theevakam.com

Leave a Reply