அன்னாசி பழத்தினை உட்கொள்வதால் இவ்வளவு நன்மையா?

0

உடல் ஆரோக்கியத்திற்காக மனிதர்கள் தனது அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொரு வகையான பழங்களை உண்டு வருகின்றனர்.

அந்த வகையில்அன்னாசி பழத்தினை உட்கொள்வதால் கிடைக்கும் மருத்துவ பயன்கள்:

இயற்கை நமக்கு அளித்த கொடைகளில் முக்கியமானவை பழங்கள் ஆகும்.

இவற்றில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகையான சத்துக்கள் இருப்பதுடன் ஒவ்வொன்றிலும் உள்ள மருத்துவ குணங்கள் நமக்கு பல நன்மைகளை செய்கின்றன.

இந்த அன்னாசி பழத்தில் மாங்கனீஸ் உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவில் உள்ளன.

அன்னாசி பெரும்பாலும் வெப்பமான பகுதிகளில் பயிரிடப்படுகின்றது.

அத்துடன் புரதத்தை செரிக்கக் கூடிய புரோமலைன் என்ற என்சைம் இவற்றுள் அதிகமாகவுள்ளது.

இது இரத்தம் உறையாமல் பாதுகாக்கிறது என்பதுடன் இதில் வைட்டமின் சி சத்துக்களும் அதிகம் உள்ளது.

இது இதய நோய்கள் மற்றும் மாரடைப்புளிலிருந்து பாதுகாக்கிறது.

அத்துடன் இந்த அன்னாச்சி பழத்தை சாப்பிடுவதால் காது மற்றும் சளித்தொல்லை, ப்ளு காய்ச்சல் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

மேலும் உடலுக்கு சோர்வு இன்றி செயற்பட ஏவுகிறது.

ஆகவே உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள அன்னாசி பழத்தினை எமது அன்றாட வாழ்க்கையில் சேர்த்துக்கொள்வோம்.

Leave a Reply