மக்கள் அனைவரும் உடல் ஆரோக்கியத்திற்காக தமது அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொரு வகையான காய்களை உண்டு வருகின்றனர்.
அந்த வகையில் நெல்லிக்காயை உட்கொள்வதால் கிடைக்கும் மருத்துவ பயன்கள் :
குறிப்பாக இந்த நெல்லி மரங்கள் காடுகள் மற்றும் வீட்டுத் தோட்டங்களில் வளரந்து காணப்படும்.
புளிப்பு இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவைகளை கொண்டு காணப்படும் இந்த நெல்லிக்காய்களை உண்பதால் ஏற்படும் பயன்களைப் பார்ப்போம்.
குளிர்ச்சித் தன்மையானது, கண்களுக்கு குளிர்ச்சி தரும் , செறிமானத்தைத் தூண்டும்,சிறுநீர் பெருகும், குடல் வாயுவை அகற்றும் உடல் சூடு மற்றும் எலும்புருக்கி போன்றவற்றை குணமாக்கும்.
அத்துடன் நெல்லிக்காய் இலை, காய், வற்றல் ஆகியவையும் மருத்துவ பயன்கொண்டவையாக காணப்படுகின்றது.
நெல்லிக்காய் சாறு 15 மி.லி, தேன் 15 மி.லி, எலுமிச்சம் சாறு 15 மி. மீ போன்றவற்றை ஒன்றாக கலந்து காலையில் மாத்திரம் சாப்பிட்டு வர மதுமேகம் குணமாகும்.



