சேலம் மாவட்டத்தில் நேற்று இரவு சுமார் 5 மணித்தியாலயத்திற்க்கு மேலாக பெய்த கன மழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை நேரத்தில் பெய்யும் மழை காரணமாகக் குளிர்ச்சியான சூழ்நிலை சேலம் மாவட்டத்தில் நிலவுகிறது.
இதன் காரணத்தால் நிலத்தடி நீர் மட்டமும் கணிசமாக உயர்ந்து வருகிறது. தொடர் மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த சூழலில் சேலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் லேசான மழை இன்று மீண்டும் பெய்ய ஆரம்பித்துள்ளது.
ஆரம்பத்தில் தூறலாக பெய்த மழை பின்னர் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாது பெய்து சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.



