மக்கள் அனைவரும் உடல் ஆரோக்கியத்திற்காக ஒவ்வொரு வகையான பழத்தினை உட்கொள்கின்றனர்.
அந்த வகையில் நாவல் பழத்தினை உட்கொள்வதால் கிடைக்கும் மருத்துவ பயன்கள் :
சாலையோரங்களில் தானாகவே வளர்ந்து நிற்கும் மரம் நாவல் மரம் ஆகும்.
இந்த மரத்தில் இருந்து கிடைக்கும் ஒவ்வொரு பாகங்களும் அற்புத மருத்துவம் கொண்டவை.
அந்த வகையில் குளிர்ச்சியை தரும் இதன் பட்டை , விதை, இலை, வேர், பழம் அனைத்திலும் ஒவ்வொரு வகையான மருத்துவ குணம் நிரம்பியுள்ளது.
அத்துடன் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உகந்த பழம் நாவல் பழம் ஆகும்.
அவ்வாறு மாதவிடாய் காலங்களில் பெண்களின் உடலில் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை இந்த நாவல் பழங்கள் கட்டுப்படுத்துகின்றன.
இதில் உள்ள கால்சியம் எலும்புகளுக்கு பலத்தையும் தருகிறது.



