எதிர்வரும் 10ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரையில் கதிர்காமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளிலுள்ள மதுபான சாலைகள் மூடப்படும் என மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய குறித்த மதுபானசாலைகள் அனைத்தும் எசல மஹா பெரஹர இடம்பெறவுள்ளதன் காரணத்தினால் மூடப்படவுள்ளதாக அந்தத் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
தற்போது நாட்டில் நிலவும் கொவிட் நிலையினைக் கருத்திற்கொண்டு இம் முறை வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் உற்சவம் பக்தர்களின் பங்குபற்றல் இன்றி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



