கொவிட் நோய் தொற்றுக்கான அதிசய முகக்கவசம்.

0

தற்போது உலகளாவிய ரீதியில் பரவல் அடைந்து வரும் கொவிட் தொற்றிலிருந்து மக்கள் அனைவரும் பாதுகாப்பு பெறுவதற்கு முகக் கவசத்தினை அணியுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த சாமியார் ஒருவர் 5 லட்சம் மதிப்பிலான தங்க முகக் கவசத்தை அணிந்து வருகின்றார்.

அத்துடன் கான்பூரைச் சேர்ந்த மனோஜ் செங்கர் என்பவரே இவ்வாறு ஐந்து லட்சத்தில் தங்கக் முகக் கவசத்தை செய்து பயன்படுத்தி வருகின்றார்.

இந்த முகக் கவசத்திற்கு ‘ஷிவ் ஸ்வர்ன் ரஷக் ‘ என்று பெயரிட்டுள்ளது.

மேலும் அவர் இந்த தங்க முகக் கவசத்தை பூஜை செய்து மந்திரத்தை ஓதியதன் பின் முகத்தில் அணிந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply