சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 440 பேர்.

0

கடந்த மூன்று மாத காலப் பகுதியில் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 440 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த நபர்கள் வடக்கு,கிழக்கு, தென் கிழக்கு மற்றும் வட மேற்கு கடல் பிராந்தியங்களில் கடற்படையினறால் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக அவர்கள் பயன்படுத்திய 153 படகுகளும் கடற்தொழில் உபகரணங்களும் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் காவல் நிலையத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply