உடல் ஆரோக்கியத்திற்காக மனிதர்கள் தமது அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொரு வகை பழங்களை உண்டு வருகின்.
குறிப்பாக இந்த பப்பாளி பழம் எல்லா காலங்களிலும் கிடைப்பதுடன் மலிவானது, இனிப்பானது, எல்லோரும் அறிந்தது, சத்துக்கள் மிகுந்தது, மஞ்சள் சிவப்பு நிற பழங்களாகவும் சில சமயம் பச்சை கலந்த நிறத்திலும் காணப்படும்.
இந்தப் பழம் வருடம் முழுவதுமே கிடைக்கக்கூடிய ஒரு பழம் என்பதுடன் இதில் வைட்டமின் ஏ உயிர் சத்து நிறைய காணப்படுகின்றன.
அந்த வகையில் பப்பாளி பழத்தை உட்கொள்வதால் கிடைக்கும் மருத்துவ பயன்களை பார்ப்போம்:

பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும்.
எலும்பு வளர்ச்சி பல் உறுதி ஏற்படும்
தொடர்ச்சியாக பப்பாளி பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும், பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.
நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி ஊறியபின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி அதன் அழகு பெறும்.
பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.
பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண்,புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.
பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.
அத்துடன் பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.
மேலும் பப்பாளியின் விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூசி வர அதிலுள்ள விஷங்கள் இறங்கும்.
அதேவேளை முகப்பரு உள்ளவர்கள் பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதி துண்டுகளை மென்மையாக முகத்தில் தேய்க்கவேண்டும்.
இது முகப்பருக்களைப் போக்கி முகச் சுருக்கங்களையும் நீக்கி பொலிவு கூட்டும் பப்பாளிப்பழம் விலை குறைவு ஆனால் அது தரும் பயன்கள் ஏராளம் ஆகும்.




