தாம்பத்தியத்தில் அதிக சுகம் கிடைக்க வேண்டுமா..? ஆண்களே! இது உங்களுக்காக..!

0

மனித இனம் பரிணாம வளர்ச்சி அடைவதற்கு முன்னர் இருந்தே இந்த உள்ளாடைகள், ஆடைகள் எதுவுமே அணியாமல் பிறந்த மேனியாகவே திரிந்தனர். கால மாற்றம் அடைந்த பின்னர் உடைகளை மனிதர்கள் அணிய தொடங்கினர். அதிலும் குழந்தை பருவத்தில் நாம் பெரும்பாலும் பிறந்த மேனியாகவே இருந்து பழகி வந்திருப்போம். ஒரு கால கட்டத்திற்கு மேல், இந்த பழக்கம் மாறி உள்ளாடை அணியும் பழக்கம் நமக்கு வந்து விட்டது.

இன்னும் சிலர் உள்ளாடை அணியாமல் இருக்கவும் செய்கின்றனர். உள்ளாடை அணியாமல் இருப்பதால் எண்ணற்ற நன்மைகள் உண்டாகும் என உள்ளாடைகளை பற்றிய ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இதை தெரிந்து கொண்டால் நீங்கள் கூட இனி உள்ளாடை இல்லாமல் உறங்குவீர்கள்.

உள்ளாடை அணியாமல் இருந்தால் ஆண்களுக்கு விந்தணுவின் ஆரோக்கியம் பெருகுவதோடு மேலும் பல நன்மைகளும் கிடைக்குமாம். உள்ளாடை அணியாமல் இருப்பதால் என்னென்ன பயன்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

உள்ளாடை பற்றிய ஆய்வுகளில் சில உண்மைகள் தெரிய வந்துள்ளது. உள்ளாடை அணியாமல் இருக்க கூடிய ஆண்களுக்கும் பெண்களுக்கும் இது ஒரு தனி விதமான உணர்வை தருகிறதாம்.

காற்று சுலபமாக அந்தரங்க உறுப்புகளுக்கு செல்வதால் சுகமான நிலையை உணர்வதாக தெரிவிக்கின்றனர்.

உள்ளாடை அணியாமல் இருந்தால் நோய் கிருமிகளின் இருந்து பெரும்பாலும் உங்களை காத்து கொள்ளலாம். நாள் முழுக்க உள்ளாடை அணிந்து கொண்டே இருப்போருக்கு சங்கடமான உணர்வு ஏற்படுவதோடு, நோய் தொற்றுகளும் உண்டாகும். இதனால் அந்தரங்க உறுப்பில் அரிப்பு ஏற்பட்டு பிறகு புண்ணாக மாறி விடும்.

உள்ளாடை அணியும் ஆண்களை விட உள்ளடை அணியாமல் இருக்கும் ஆண்களுக்கே ஆண்மை அதிகமாக இருக்கும் என ஆராய்ச்சிகள் கூறியுள்ளன.
காரணம், உள்ளாடை அணியாமல் இருந்தால் அந்தரங்க உறுப்பின் தட்பவெப்பம் குறைந்து விந்தணுக்கள் அதிக ஆரோக்கியத்துடன் இருக்கும். அத்துடன் இதன் எண்ணிக்கையும் கூடுமாம்.

நாள் முழுக்க உள்ளாடை அணிந்து கொண்டு இருப்பவரா நீங்கள்..? இனி குறைந்த பட்சம் இரவிலாவது உள்ளாடை அணியாமல் இருங்கள்.
இரவு நேரத்தில் உள்ளாடை அணியாமல் உறங்கினால் விந்தணுக்கள் சீக்கிரமே இறப்பதை தடுத்து விட முடியும்

உள்ளாடை அணியும் ஆண்களை விட உள்ளாடை அணியாமல் இருக்கும் ஆண்களுக்கே சுகமான நாளாக அமைகிறது என ஆராய்ச்சிகள் சொல்கின்றன. வருடத்தின் 365 நாட்களும் இப்படி உள்ளாடை அணிந்திருப்பது நல்லதல்ல. இது ரத்த ஓட்டத்தை முற்றிலுமாக குறைத்து விடும்.

உள்ளாடை அணியாமல் ஆண்களும் பெண்களும் உறங்கும் போது, சிறப்பான தாம்பாத்திய உணர்வை பெற இயலும். மேலும், இருவருக்குள்ளும் ஆரோக்கியான உறவு ஏற்படுத்த இது ஒரு பலமாக இருக்க கூடும், என்று உளவியல் மருத்துவர்களும் கூறுகின்றனர்.

உள்ளாடையை அணிய விரும்புவோர் ஒரு சில முக்கியமான தகவலை அறிந்திருக்க வேண்டும். குறிப்பாக எந்த வகை உள்ளாடை விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்காமல் இருக்கும் என்பதை அறிய வேண்டும்.

இவற்றில் பாக்ஸர் வகை உள்ளாடை, மற்றும் சாதாரண உள்ளாடை ஆகியவற்றை பற்றி நம் அறிய வேண்டும்.

பல ஆய்வுகளின் முடிவின் படி பாக்ஸர் வகை உள்ளாடை அணிவதே சிறந்ததாம். ஏனெனில், இந்த வகை உள்ளாடைகள் பிறப்புறுப்பில் ஏற்பட கூடிய தட்பவெப்பத்தை குறைத்து விந்துவின் எண்ணிக்கையும், ஆரோக்கியமும் சீராக இருக்கும்படி செய்கிறதாம்.

உள்ளாடை அணிய வேண்டும் என்றால் இறுக்கமான உள்ளாடைகளை கட்டாயம் ஆண்கள் தவிர்த்தாக வேண்டும்.
இறுக்கமான உள்ளாடை விந்துவின் ஆரோக்கியத்தை பாதித்து மிக விரைவிலே அவற்றின் எண்ணிக்கையை குறைத்து விடுமாம். ஆதலால், பாக்ஸர் போன்ற தளர்வான உள்ளாடைகளை அணிவது சிறப்பு.

ஆண்களுக்கு விந்தணுக்களின் ஆரோக்கியம் கூடுகிறதென்றால் பெண்களுக்கு வேறு சில நன்மைகள் ஏற்படுகின்றன. பெண்களின் பிறப்புறுப்பு அதிகம் இறுக்கம் ஏற்பட்டால் வறட்சி தன்மை அதிகரிக்கும்.

இது நாளடைவில் பெண்ணுறுப்பிற்கு பாதிப்பை தருமாம். பெண்கள் தூங்கும் போது உள்ளாடை இல்லாமல் உறங்குவது இது போன்ற பாதிப்பில் இருந்து காக்குமாம்- Source: asianetnews


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply