
வாடிப்பட்டி மேட்டுப்பெருமாள் நகரில் உள்ள ஐயப்பன் திருக்கோவிலில் மண்டல பூஜை விழா நடந்தது. இதையொட்டி காலை 9 மணிக்கு ஐயப்பனுக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர், விபூதி உள்பட 18 வகையான சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சந்தனகாப்பு அலங்காரத்துடன், 18-ம்படி பூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து மதியம் 12 மணிக்கு நடைபெற்ற அன்னதானத்தை சீனிவாசன் தொடங்கி வைத்தார்.
பூஜைகளை குருநாதர்கள் காசிவிஸ்வநாதன், பூசாரி முருகன் ஆகியோர் செய்தனர். ஏற்பாடுகளை நிர்வாகிகள் உள்பட விழாகுழுவினர் செய்திருந்தனர். இதேபோல மதுரையை அடுத்த கீழக்கள்ளந்திரியில் உள்ள ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் ஐயப்பன் படம் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடைபெற்றது. ஏற்பாடுகளை அகில பாரத ஐயப்ப சேவா சங்க மாவட்ட துணை செயலாளர் சந்தனப்பெருமாள், படியான், கீழக்கள்ளந்திரி ஐயப்ப பக்தர்கள் செய்திருந்தனர். – Source: Maalaimalar
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
