முடி வளர்ச்சி எண்ணெய்..!!!

0

தலை முடிக்கு முக்கியம் எண்ணெய் என்று யோசிப்பீர்கள் ஆனால் அது முற்றிலும் தவறு. தலை முடியை விட அதிகளவு சத்துக்கள் தான் தேவை. சத்துக்கள் இல்லையென்றால் முடி மெலிசாகத்தான் வளரும். இந்த குறிப்பை பயன்படுத்துங்கள் அதேபோல் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள் வாங்க இப்போது என்ன எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று தெரிந்துகொள்வோம்.

விளக்கெண்ணெய் என்றால் யாரும் தலைக்கு தேய்த்து குளிக்க மாட்டிர்கள் ஆனால் அது தவறு நல்லெண்ணெய் விட அதிகளவு முடி வளர்ச்சியை அதிகமாக்க கூடிய சக்தி விளக்கெண்ணெயில் தான் உள்ளது. சிலர் தேய்க்க மறுப்பார்கள் காரணம் இதில் குளிர்ச்சி தன்மை அதிகமாக இருக்கும் அதனால் மறுத்துவிடுவார்கள்.

விளக்கெண்ணெய் 1/2 கப், தேங்காய் எண்ணெய் 1/2 கப் இந்த இரண்டு எண்ணெய்யும் ஒரே பாட்டில் போட்டு கலந்து வைத்துக்கொள்ளவும் வாரத்திற்கு இரண்டு நாட்கள் கட்டாயம் இந்த எண்ணெய்யை தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வும் இருக்காது அதேபோல் நன்றாக முடி வளரும்.

Leave a Reply