இயற்கை தலை முடி சாயம்.

0

தேவையான பொருள்கள்:

இண்டிகோ பவுடர் (அவுரி இலை) – தேவையான அளவு
மருதாணி இலை பவுடர் – தேவையான அளவு
உப்பு – 1 டேபிள் ஸ்பூன்
சோள மாவு (Corn Flour) – 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – தேவையான அளவு

செய்முறை: –
இயற்கை தலை முடி சாயம்:
உங்கள் முடியின் அளவுக்கு தகுந்தார் போல இண்டிகோ பவுடர், மருதாணி இலை பவுடர் எடுத்து கொள்ளவும்.

செய்முறை
முதலில் மருதாணி இலை பவுடர், எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு பேஸ்ட் போல செய்து காற்று புகாதவாறு மூடி இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
ஊறவைத்த மருதாணி பேஸ்ட்டை சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து பின் பிரஷ் மூலம் தலைமுடியில் முழுவதும் தடவி கொள்ளவும். இதை ஒரு மூன்று மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
மூன்று மணி நேரம் கழித்து தலையை நீரினால் அலசி கொள்ளவும். அலசும் போது ஷாம்பு, சீயக்காய் பயன்படுத்த கூடாது.

தலைமுடி காய்ந்த பிறகு ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு இண்டிகோ பவுடர் எடுத்து கொள்ளவும். பின் அதில் 3 pinch அளவு உப்பு சேர்த்து கொள்ளவும். பின்பு அதில் 2 டேபிள் ஸ்பூன் அளவு சோள மாவு (Corn Flour) சேர்த்து, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல செய்து இதையும் தலையில் தடவி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
இரண்டு மணி நேரம் கழித்து தலை முடியை நீரினால் அலசி கொள்ளவும். ஷாம்பு, சீயக்காய் பயன்படுத்த கூடாது.
மறுநாள் அல்லது இரண்டு நாள் கழித்து நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கவும். இப்பொழுது முடி இயற்கையாகவே கருப்பாக மாறிவிடும்.

Leave a Reply