கண் துடிப்பு நிற்க..!!

0

தேநீர் மற்றும் காஃபி போன்ற காஃபைன் சேர்ந்த பானங்களை குடிப்பது, காஃபைன் கலந்த சாக்லேட் சாப்பிடுவதை குறைத்துக்கொள்ளலாம் அல்லது முற்றிலும் நிறுத்தி விடலாம்.

ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் காஃபைனை நிறுத்திவிட்டு கண்ணிமை துடிக்கிறதா என்று கண்காணிக்கலாம்.

தங்களுக்கு கண்கள் துடிப்பதற்கு மதுபானமும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். எனவே கண் துடிப்பு நிற்க மது அருந்துவதை தவிர்த்து கொள்ளவும்.

சரியான தூக்கம் இல்லையென்றாலும், கண் தொடர்ந்து அதிகமாக துடித்து கொண்டே இருக்கும். எனவே ஒருவருக்கு இரவு தூக்கமானது ஏழு முதல் எட்டு மணி நேரம், நல்ல ஆழ்ந்து உறங்குங்கள்.

குறிப்பாக படுக்கைக்குச் செல்லும் முன்னர் தொலைக்காட்சி மற்றும் மொபைல் போன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

உடலில் தேவையான அளவு நீர்ச்சத்து குறைபாட்டினால், இந்த கண் துடித்து கொண்டே இருக்கும்.

எனவே தினமும் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் அருந்துங்கள். இவ்வாறு செய்வதினால் இந்த கண் துடிப்பதை தடுத்துவிடலாம்.

மேலும் மெக்னீசியம் போன்ற சத்துகள் குறைவதும் கண்ணிமை துடிப்பை உருவாக்கக் கூடும் என்கின்றர்.

இதில் இன்னும் முடிவு எட்டப்பட வேண்டுமென்றாலும், சமச்சீர் உணவை உண்பதன் மூலம் இமை துடிப்பை தடுக்கலாம்.

Leave a Reply