மல்லிகை பூவின் பயன்கள்..!!

0

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் மல்லிகை பூவை ஓரிரண்டு உண்டு வர நோயெதிர்ப்பு சக்தி உயரும்.

தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகை பூவிற்கு உண்டு. எனவே சில மல்லிகை பூவை எடுத்து கையில் கசக்கி, அவற்றை நெற்றியில் பற்று போட்டால் தலைவலி குணமாகும்.

அவ்வாறு மல்லிகை பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படும். இந்த எண்ணெய் உடலில் ஏற்படும் பலவகையான பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது.

மேலும் சில நேரங்களில் காயங்களின் காரணமாக வீக்கங்கள் ஏற்படலாம். அப்போது அந்த வீக்கத்தில் மல்லிகை பூவை அரைத்து தடவினால் வீக்கங்கள் குறையும்.

அதுமாத்திரமின்றி வயிற்று புண் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக வாய் புண் இருக்கும், இந்த பிரச்சனையை சரி செய்ய மல்லிகை பூவை சிறிதளவு தண்ணீரில் கொதிக்கவைத்து அந்த தண்ணீரை வடிகட்டி தினமும் காலை, மாலை என இரு வேளை குடித்து வர, வாய் புண் மற்றும் வயிற்று புண் குணமாகும்.

Leave a Reply